பிரபல தொல்லியல் அறிஞர்... கல்வெட்டறிஞர் புலவர் ராசு காலமானார்!

தொல்லியல் அறிஞர் புலவர் ராசு
தொல்லியல் அறிஞர் புலவர் ராசு

தொல்லியல் அறிஞர் புலவர் ராசு காலமானார். அவருக்கு வயது 85.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை வெள்ளமுத்து கவுண்டன்வலசு என்ற ஊரில் பிறந்தவர் புலவர் ராசு. இவர், திருப்பனந்தாள் செந்தமிழ் கல்லூரியில் வித்வான் பட்டத்தை முடித்தார். அத்துடன் சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டங்களையும் பெற்றார். இதையடுத்து, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் கொங்கு நாட்டு வரலாற்றில் சமண சமயம் எனும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.

ஈரோட்டில் தமிழாசிரியர் பணியைத் தொடங்கி தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையில் பணிபுரிந்தார். பிறகு தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இணைந்து கல்வெட்டு தொல்லியல்துறையில் துறை தலைமை பொறுப்பை ஏற்று திறம்பட ஆய்வு பணியை மேற்கொண்டு வந்தார். கல்வெட்டறிஞர், பேரூராதீன புலவர், கல்வெட்டியல், கலைச்சம்மல் , திருப்பலிச் செம்மல் உள்ளிட்ட பட்டங்கள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தொல்லியல் அறிஞர் புலவர் ராசு இன்று காலை 8 மணிக்கு உயிரிழந்தார். இவருக்கு கெளரி அம்மாள் என்ற மனைவியும் , 3 மகன்களும் உள்ளனர். அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது உடல் இன்று ஈரோடு கொண்டு செல்லப்பட்டு ஈரோடு புதிய ஆசிரியர் குடியிருப்பில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் இறுதிசடங்கு நடைபெற உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in