புதுச்சேரியில் இருந்து பெங்களூருவுக்கு மீண்டும் விமான சேவை! பயணிகள் உற்சாகம்!

புதுச்சேரியில் இருந்து பெங்களூருவுக்கு மீண்டும் விமான சேவை! பயணிகள் உற்சாகம்!

புதுச்சேரியில் இருந்து பெங்களூருவுக்கு அக்டோபர் 2 முதல் மீண்டும் விமான சேவை தொடங்கப்படுகிறது.

புதுச்சேரி லாஸ்பேட்டை விமான நிலையத்தில் இருந்து பெங்களூருவுக்கு, 2013-ம் ஆண்டு ஸ்பைஸ் ஜெட் நிறுவனமும், 2015-ம் ஆண்டு ஏர் இந்தியா நிறுவனமும் விமான சேவையை தொடங்கின.

ஆனால் பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லாததால் சேவை நிறுத்தப்பட்டது. இந்நிலையில், உதான் திட்டத்தின் கீழ் சிறிய நகரங்களை வான் வழியாக இணைக்க விமான நிறுவனங்களுக்கு பாதி கட்டணத்தை, மத்திய அரசே ஏற்கும் என அறிவிப்பு வெளியானது.

இதையடுத்து கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் ஐதராபாத்துக்கு விமான சேவையை தொடங்கியது. அதே போல் பெங்களூருவுக்கும் சேவையை தொடங்க திட்டமிட்டது. ஆனால், சேவைகள் தொடங்கப்படவில்லை.

இந்நிலையில், அக்டோபர் 2 ம் தேதி முதல் புதுச்சேரியில் இருந்து பெங்களூருவுக்கு விமான சேவை மீண்டும் தொடங்கப்பட உள்ளது. ஐதராபாத்திலிருந்து மதியம் 12.25 மணிக்கு புறப்படும் விமானம் மதியம் 2 மணிக்கு புதுச்சேரி வந்தடையும்.

புதுச்சேரியிலிருந்து மதியம் 2.20 மணிக்கு புறப்பட்டு 3.20 மணிக்கு பெங்களூரு சென்றடையும். அங்கிருந்து டெல்லிக்கு இணைப்பு விமான சேவை தரப்படும். அதேபோல் பெங்களூருவில் இருந்து புதுச்சேரிக்கு மதியம் 3.50 மணிக்கு புறப்பட்டு 4.50-க்கு வந்தடையும்.

புதுச்சேரியிலிருந்து மாலை 5.10 மணிக்கு புறப்பட்டு மாலை 6.35 மணிக்கு ஐதராபாத் சென்றடையும். அங்கிருந்து விசாகப்பட்டினத்துக்கு இணைப்பு சேவை உண்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in