மதுவிலக்கு சட்டத்திருத்த மசோதா நாளை அறிமுகம் - தண்டனை கடுமையாக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1937-ல் திருத்த மசோதா நாளை சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும் என பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவகாரத்தில் பேசிய பா.ம.க உறுப்பினர் ஜி.கே.மணி, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பதில் அளித்தார்.

அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், “ இங்கு, கூட்டத் தொடர் தொடங்கியதிலிருந்து கடந்த சில நாள்களாகவே கள்ளக்குறிச்சி விவகாரத்தைத் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம். இதைத் தான் மீண்டும் உறுப்பினர் கோ.க.மணி இங்கே எடுத்துப் பேசத் தொடங்கியிருக்கிறார். என்னைப் பொறுத்தவரை, உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய பொருள்களைக் காய்ச்சுதல், விற்பனை செய்வது போன்ற குற்றங்களுக்கான தண்டனை போதுமானதாகவும் கடுமையாகவும் இல்லை.

இதுபோன்ற குற்றங்களுக்கு வழங்கப்படும் தண்டனையை கடுமையாக்கி, இக்குற்றங்களை முற்றிலும் தடுக்க முதற்கட்டமாக, தமிழ்நாடு மது விலக்குச் சட்டம், 1937-ல் திருத்த மசோதா ஒன்று நாளை சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்ற விவரத்தை இந்த அவைக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in