சொல்வேன், ஆனால் இதை சொல்லமாட்டேன்... மவுனம் கலைத்த பிரசாந்த் கிஷோர்!

பிரசாந்த் கிஷோர்
பிரசாந்த் கிஷோர்
Updated on
2 min read

இனி வரும் தேர்தல்களில் எந்த கட்சி வெற்றி பெறும் என கணிப்பு சொல்வேனே தவிர, எத்தனை இடங்களில் வெற்றி பெறும் என கணிக்க மாட்டேன் என பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.

மக்களவைத் தேர்தலில் பாஜகவின் மற்றுமொரு வெற்றிக்கு பிரதமர் நரேந்திர மோடி வழி நடத்துவார்; பாஜக வெற்றி பெறும் தொகுதிகளின் எண்ணிக்கை கடந்த 2019 வெற்றிக்கு அருகிலோ அல்லது அதைவிட சற்றே அதிகமாகவோ இருக்கும் என்று பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் கூறியிருந்தார்.

பிரசாந்த் கிஷோர்
பிரசாந்த் கிஷோர்

அவர் மட்டுமின்றி பல்வேறு கருத்துக் கணிப்புகளும் பாஜக கூட்டணி 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என்று கூறின. ஆனால், ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை பாஜக உள்ளிட்ட எந்த கட்சிகளும் பெற முடியவில்லை. இதனால், கூட்டணி கட்சிகள் ஆதரவோடு மூன்றாவது முறையாக நரேந்திர மோடி நாளை பிரதமராக பதவியேற்கிறார்.

தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் பிரசாந்த் கிஷோரின் கணிப்புகள் பொய்யானது குறித்து பலரும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தனர். ஆனால், அதற்குப் பதிலளிக்காமல் அவர் மவுனமாக இருந்தார்.

பிரசாந்த் கிஷோர்
பிரசாந்த் கிஷோர்

இந்த நிலையில், பிரபல ஊடகம் ஒன்றிற்கு பிரசாந்த் கிஷோர் பேட்டியளித்துள்ளார். அதில், “நானும், தேர்தல் முடிவுகள் தொடர்பாக ஆய்வு செய்வோரும் தவறாக கணித்து விட்டோம். மக்களின் விமர்சனங்களை ஏற்க தயாராக இருக்கிறோம். இனி வரும் தேர்தல்களில் எந்த கட்சி வெற்றி பெறும் என்று சொல்வேனே தவிர, எத்தனை இடங்கள் வெற்றி பெறும் எனச் சொல்லமாட்டேன். பல விஷயங்களால் மக்களவை தேர்தலில் எனது கணிப்பு பொய்யாகிவிட்டது.

நரேந்திர மோடி
நரேந்திர மோடி

பாஜக 300 தொகுதிகளை நெருங்கி விடும் என நாங்கள் சொன்னோம். ஆனால், அவர்கள் 240 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றார்கள். அதேசமயம் பிரதமர் மோடிக்கு எதிராக சின்னதாக கோபம் இருப்பதை முன்கூட்டியே குறிப்பிட்டேன். ஆனால், அது அதிருப்தியாக மாறாது எனவும் கூறினேன்.

எண்ணிக்கையைத் தவிர்த்து பார்த்தால் எனது கணிப்புகள் தவறாக இல்லை. மேலும் எதிர்கட்சிகள் ஒரு பாசிட்டிவான பிரச்சாரத்தை முன்வைக்கவில்லை. மொத்த வாக்கு சதவீதத்தில் பாஜக 36 சதவீதம் பெற்றுள்ளது. இது முந்தைய தேர்தலைக் காட்டிலும் 0.7 சதவீதம் மட்டுமே குறைவாகும். ஒரு தேர்தல் வியூக நிபுணராக நான் கணிப்பை எண்களில் தெரிவித்திருக்கக் கூடாது. கடந்த 2 ஆண்டுகளில் நான் செய்த இரண்டாவது தவறு இது” என்று கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in