நாடு திரும்புவதற்கு முன்பே ஜாமீன் கேட்ட பிரஜ்வல் ரேவண்ணா... அதிரடி காட்டிய நீதிமன்றம்!

பிரஜ்வல் ரேவண்ணா
பிரஜ்வல் ரேவண்ணா
Updated on
2 min read

ஆபாச வீடியோக்கள் மற்றும் பாலியல் வழக்கில் தேடப்பட்டு வரும் பிரஜ்வல் ரேவண்ணா முன்ஜாமின் கோரி மனு தாக்கல் செய்தார். அவரது முன்ஜாமீன் மனுவை பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் இன்று நிராகரித்தது.

பாலியல் வழக்கு உள்ளிட்ட 3 வழக்குகளில் முன்ஜாமீன் கோரி பெங்களூரு எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சிறப்பு நீதிமன்றத்தில் பிரஜ்வல் ரேவண்ணா மனுத்தாக்கல் செய்திருந்தார். பிரஜ்வலின் வழக்கறிஞர் அருண் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி சிட்டிங் எம்.பியும், நடந்து முடிந்த தேர்தலின் வேட்பாளருமான பிரஜ்வல் ரேவண்ணா, பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் சுமார் 3 ஆயிரம் ஆபாச வீடியோக்கள் கடந்த 26-ம் தேதி வெளியாயின. இதையடுத்து அவர் ஜெர்மனிக்கு தப்பியோடினார். பிரஜ்வல் ரேவண்ணா மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க கர்நாடகா சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் மற்றும் புளூ கார்னர் நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன. பிரஜ்வல் ரேவண்ணா குறித்த வீடியோக்கள் வெளியாகி ஒரு மாதம் ஆன நிலையில், அவர் இன்னும் கைது செய்யப்படாதது பெரும் சலசலப்புகளை உருவாக்கியுள்ளது.

பிரஜ்வல் ரேவண்ணா மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம்
பிரஜ்வல் ரேவண்ணா மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம்

இதனிடையே இரு தினங்களுக்கு முன்னர் வீடியோ வெளியிட்ட பிரஜ்வல் ரேவண்ணா, மே 31 அன்று எஸ்ஐடி முன்பாக தான் ஆஜராகி தனக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்திருந்தார். மேலும் ஜேடிஎஸ் கட்சியினர் மற்றும் கர்நாடக பொதுமக்கள் ஆகியோரிடம் பகிரங்க மன்னிப்பும் கோரினார். ராகுல் காந்தி உள்ளிட்ட பல காங்கிரஸ் தலைவர்களின் சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக, தன் மீதான சர்ச்சை எழுந்திருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

பிரதமர் மோடி, தனது தாத்தா தேவ கவுடா, தந்தை ரேவண்ணா, சித்தப்பா குமாரசாமி உள்ளிட்டோருடன் பிரஜ்வல் ரேவண்ணா
பிரதமர் மோடி, தனது தாத்தா தேவ கவுடா, தந்தை ரேவண்ணா, சித்தப்பா குமாரசாமி உள்ளிட்டோருடன் பிரஜ்வல் ரேவண்ணா

பிரஜ்வல் ரேவண்ணா நாளை (மே 30) நள்ளிரவில் நாடு திரும்ப உள்ளதாகவும் தகவல் வெளியானது. பெங்களூருவில் தரையிறங்கும் பிரஜ்வல் ரேவண்ணாவை, விமான நிலையத்திலேயே கைது செய்ய எஸ்ஐடி முடிவு செய்துள்ளது. இதற்காக இப்போது முதலே பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையத்தில் கண்காணிப்புப் பணியிலும் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில் பாலியல் வழக்கு உள்ளிட்ட 3 வழக்குகளில் முன்ஜாமீன் கோரி பிரஜ்வல் ரேவண்ணா பெங்களூரு எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இதையும் வாசிக்கலாமே...

நாளை குமரியில் மோடியின் தியான நிகழ்ச்சி நடக்குமா?!காங்கிரஸ் கட்சியால் பெரும் பரபரப்பு!

பெண்களே உஷார்... மளிகை கடையில் பொருள் வாங்குவது போல் வந்து நகையை பறித்துச் சென்ற இளைஞர்

பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரி வருகை... கடலோர காவல்படை கப்பல்கள் தீவிர ரோந்துப்பணி

பகீர்... அரசு பள்ளிக்குள் மாணவிக்கு நடந்த அக்கிரமம்: கர்ப்பமாக்கிய தலைமை ஆசிரியர் கைது!

பிரஜ்வல் ரேவண்ணா வீட்டில் எஸ்ஐடி விடிய விடிய சோதனை... கட்டில், தலையணைகள் பறிமுதல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in