நார்வே செஸ் போட்டி... உலகின் முதல்நிலை வீரர் கார்ல்ஸனை வீழ்த்தி பிரக்ஞானந்தா அபார சாதனை!

மேக்னஸ் கார்ல்சன் - பிரக்ஞானந்தா
மேக்னஸ் கார்ல்சன் - பிரக்ஞானந்தா
Updated on
1 min read

நார்வேயில் நடைபெற்று வரும் செஸ் போட்டியில் உலகின் முதல் நிலை வீரர் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி இந்தியாவின் பிரக்ஞானந்தா அபார சாதனை படைத்துள்ளார்.

நார்வே நாட்டில் நடைபெற்று வரும் கிளாசிக்கல் செஸ் போட்டியில் உலகின் ஆறு முதல் நிலை வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன், அமெரிக்காவின் டிங் லிரன், பாபியோ கருவானா, ஹிக்காரு நாக்கமுரா, அலிரெசா பிரவுசா மற்றும் இந்தியாவின் பிரக்ஞானந்தா ஆகியோர் ஆண்கள் பிரிவில் பங்கேற்றுள்ளனர். இதே போல் பெண்கள் பிரிவில் இந்தியாவின் வைஷாலி, கோனேரு ஹம்பி, ஜு வெஞ்சன், லெய் டிங்க்ஜி, பியா கிராம்லிங், அன்னா மியுசீஜக் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

மேக்னஸ் கார்ல்சன் - பிரக்ஞானந்தா
மேக்னஸ் கார்ல்சன் - பிரக்ஞானந்தா

6 பேர் மட்டும் பங்கேற்கும் இந்த தொடரில் ஒவ்வொரு வீரரும் சக வீரருடன் இரண்டு முறை போட்டியிட வேண்டும். நேற்று நடைபெற்ற போட்டியில் உலகின் முதல் நிலை வீரர் மேக்னஸ் கார்ல்சனுடன் இந்தியாவின் பிரக்ஞானந்தா போட்டியிட்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் கார்ல்சனின் நகர்வுகளை சிறப்பாக எதிர்கொண்ட பிரக்ஞானந்தா, இறுதியில் வெற்றி பெற்று 3 புள்ளிகளுடன் முன்னிலை பெற்றார். இதன் மூலம் மொத்த புள்ளிப் பட்டியலில் 5.5 புள்ளிகளுடன் பிரக்ஞானந்தா முதலிடம் பிடித்துள்ளார்.

வைஷாலி - கோனேரு ஹம்பி
வைஷாலி - கோனேரு ஹம்பி

இந்த வெற்றியின் மூலம் மேக்னஸ் கார்ல்சனை இதுவரை வீழ்த்தியுள்ளவர்கள் பட்டியலில் 4வது நபராக பிரக்ஞானந்தா இணைந்துள்ளார். அதுவும் அவரது சொந்த நாடான நார்வேயிலேயே வீழ்த்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பெண்கள் பிரிவில் பிரக்ஞானந்தாவின் சகோதரி வைசாலி, 5.5 புள்ளிகளுடன் தற்போது முதல் இடத்தில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in