கேரளாவில் வேகமாக பரவும் பறவைக்காய்ச்சல்... நீலகிரி வந்த கோழி இறைச்சி வாகனத்தை திருப்பியனுப்பிய அதிகாரிகள்

நீலகிரி மாவட்ட எல்லையில் கால்நடைத்துறையினர் தீவிர கண்காணிப்பு
நீலகிரி மாவட்ட எல்லையில் கால்நடைத்துறையினர் தீவிர கண்காணிப்பு

கேரள மாநிலத்தில் பறவை காய்ச்சல் அதிகரித்து வருவதன் காரணமாக நீலகிரி மாவட்டத்திற்கு கோழி இறைச்சியை ஏற்றி வந்த கேரள வாகனங்களை, கால்நடைத்துறை அதிகாரிகள் திரும்ப அனுப்பினர்.

கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பறவைக்காய்ச்சல் அதிகரித்து வருகிறது. கோழி, வாத்து மற்றும் பிற பறவைகளில் பறவை காய்ச்சல் நோய் அதிகரித்து வருவதால் ஏராளமான பறவைகள் உயிரிழந்து வருகின்றன. இதன் காரணமாக கேரளாவிலிருந்து கோழி, வாத்து மற்றும் அதன் இறைச்சி, தீவனங்கள் ஆகியவற்றை தமிழ்நாட்டிற்கு கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கேரளாவை ஓட்டியுள்ள நீலகிரி, கோவை, தேனி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு பணிகளை கால்நடைத் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்ட கோழி இறைச்சி
கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்ட கோழி இறைச்சி

தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு கோழி, இறைச்சி, முட்டை, தீவனங்கள் ஆகியவற்றை ஏற்றிச்சென்று, அவற்றை இறக்கிவிட்டு தமிழ்நாட்டுக்கு திரும்பும் வாகனங்களும் தீவிர கண்காணிப்பிற்கு பின்னரே தமிழ்நாட்டிற்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறது. எல்லையோரப் பகுதிகளில் சோதனைச் சாவடிகள் அமைத்து கால்நடைத் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோழி இறைச்சி ஏற்றி வந்த வாகனத்தை திருப்பி அனுப்பிய அதிகாரிகள்
கோழி இறைச்சி ஏற்றி வந்த வாகனத்தை திருப்பி அனுப்பிய அதிகாரிகள்

இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் நாடுகாணி சோதனைச் சாவடி வழியாக மினி டெம்போ லாரி ஒன்றில் 300 கிலோ கோழி இறைச்சி கொண்டுவரப்பட்டதை அதிகாரிகள் கண்டறிந்தனர். இதையடுத்து தமிழகத்துக்கு கோழி இறைச்சி கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ள தகவலை மினி லாரி ஓட்டுநருக்கு தெரியப்படுத்திய அதிகாரிகள், இறைச்சியை கேரளாவிற்கே திரும்ப எடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்தினர். தொடர்ந்து சோதனை சாவடி வழியாக வரும் பிற வாகனங்களுக்கும் கிருமிநாசினி தெளித்த பின்னர் தமிழ்நாட்டிற்குச் செல்ல அனுமதி அளித்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in