நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு... தபால் வாக்குகள் எண்ணும் பணி துவங்கியது!

வாக்கு எண்ணும் பணிக்கு தயாராக உள்ள அரசு ஊழியர்கள்
வாக்கு எண்ணும் பணிக்கு தயாராக உள்ள அரசு ஊழியர்கள்

தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் பதிவான தபால் வாக்குகள் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இருந்து வாக்கு எண்ணும் மையங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டது.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்ற நிலையில், தமிழ்நாட்டில் முதல் கட்ட தேர்தலான ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதற்கு முன்னதாக அரசு ஊழியர்கள், காவல்துறையினர், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் வாக்களிக்கும் வகையில் தபால் வாக்குகள் வழங்கப்பட்டிருந்தது. இந்த தபால் வாக்குகள் அனைத்தும் திருச்சிக்கு எடுத்து செல்லப்பட்டு, பின்னர் அங்கிருந்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

தபால் வாக்குகள் வைக்கப்பட்டுள்ள அறைகளின் சீல்கள் திறப்பு
தபால் வாக்குகள் வைக்கப்பட்டுள்ள அறைகளின் சீல்கள் திறப்பு

மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக இந்த தபால் வாக்குகள் பலத்த பாதுகாப்புடன் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்தன. இன்று வாக்கு எண்ணிக்கை நாடு முழுவதும் நடைபெறுவதை முன்னிட்டு இந்த தபால் வாக்குகள் முதலில் எண்ணப்படுகின்றன. காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணப்பட்ட பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8.30 மணிக்கு துவங்கும்.

தபால் வாக்குகள் உள்ள பெட்டிகள்
தபால் வாக்குகள் உள்ள பெட்டிகள்

இதையொட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இருந்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் இந்த தபால் வாக்குகள் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியே எடுக்கப்பட்டது. பின்னர் வாகனங்கள் மூலமாக இந்த தபால் வாக்குகள் அனைத்தும் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில், தபால் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு துவங்கியது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in