நடிகர் பாலா...
நடிகர் பாலா...

நெகிழ்ச்சி... 18 மலை கிராமங்கள்... இலவச ஆம்புலன்ஸ் கொடுத்த பிரபல நடிகர்!

Published on

சின்னத்திரையில் பிரபலமான நடிகர் பாலா, ஈரோடு மாவட்டம் கடம்பூரை அடுத்த குன்றி உள்ளிட்ட 18 மலை கிராம மக்களின் மருத்துவ பணிக்காக ஆம்புலன்ஸ் வழங்கியுள்ளார்.

ஈரோடு மாவட்டம் கடம்பூரை அடுத்த குன்றி உட்பட 18 மலை கிராமத்தில் சுமார் எட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் மருத்துவ தேவைகளுக்காக கடம்பூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும், சத்தியமங்கலத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கும் தினந்தோறும் சென்று வருகின்றனர். பாம்புகடி போன்ற அவசர மருத்துவ தேவைகளின் போதும், பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாமல் பலரும் உயிரிழக்கும் அவல நிலையும் இங்கு நிலவுகிறது.

இதன் காரணமாக, குன்றி உட்பட 18 மலை கிராம மக்களின் மருத்துவ அவசர உதவி காலத்தில் பயன்படும் வகையில், 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான இலவச ஆம்புலன்ஸ் வழங்க திட்டமிடப்பட்டது. இதனையடுத்து நகைச்சுவை நடிகர் பாலாவின் சொந்த நிதியின் மூலம் ஆம்புலன்ஸ் வாங்கப்பட்டு, அதன் தொடக்க விழா ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

ஆம்புலன்ஸ் வழங்கிய நடிகர் பாலா...
ஆம்புலன்ஸ் வழங்கிய நடிகர் பாலா...

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜவஹர் இந்த இலவச ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் பாலா, ”ஆம்புலன்ஸ் சேவையின்றி தவிக்கும் கிராம மக்களுக்காக, புதிய ஆம்புலன்ஸ் வழங்கியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. என்னால் முடிந்த வரை இதுபோன்ற மக்கள் சேவையில் தொடர்ந்து ஈடுபட உள்ளேன். கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் இதே போல, என்னுடைய பிறந்த நாளுக்காக ஆம்புலன்ஸ் கொடுத்து இந்த சேவையை ஆரம்பித்தேன். அதனால், இந்த உதவியை கண்டிப்பாக இனிமேலும் தொடர்ந்து செய்வேன்” என்றார்.

x
காமதேனு
kamadenu.hindutamil.in