அதிர்ச்சி... 3 வயது குழந்தையிடம் பாலியல் அத்துமீறல்… வடமாநில இளைஞர்கள் வெறிச்செயல்!

அதிர்ச்சி... 3 வயது குழந்தையிடம் பாலியல் அத்துமீறல்… வடமாநில இளைஞர்கள் வெறிச்செயல்!
Updated on
1 min read

கேரள மாநிலம் பெரும்பாவூரில் மூன்று வயது பெண் குழந்தையிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அசாம் மாநில இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.

குறுப்பம்பாடி பகுதிக்கு அருகே இயங்கிவரும் பிளைவுட் நிறுவனத்தில் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் பணியாற்றி வருகின்றனர். அங்கு பணியாற்றும் பெண் தொழிலாளி, தனது 3 வயது குழந்தையை உடன் அழைத்து வந்திருந்தார்.

வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பிய பிறகு, குழந்தை தனது அந்தரங்க உறுப்பு பகுதியில் வலி இருப்பதாக தாயிடம் கூறி அழுதது. தாய் விசாரித்த போது, குழந்தை தனக்கு தெரிந்தவரை கூறியது. இதையடுத்து குழந்தையை அவரது தாய் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

அதைத்தொடர்ந்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். அதன் அடிப்படையில் போலீஸார் பிளைவுட் கம்பெனியில் விசாரணை நடத்தினர். பின்னர் குற்றச் செயலில் ஈடுபட்ட அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஸஜாலால், உபைதுல்லா ஆகிய இருவரை கைது செய்தனர்.

அதன்பின் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் நடைபெற்ற விசாரணையில் குற்றவாளிகளை குழந்தை அடையாளம் காட்டியதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றவாளிகள், குழந்தையுடன் நடந்து செல்லும் சிசிடிவி காட்சிகள் போலீஸாருக்கு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாதிக்கப்பட்ட குழந்தையின் உடல்நிலை தற்போது நல்ல நிலையில் உள்ளதாக மருத்துவமனை மற்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

உஷார்... தமிழகத்தில் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

பிரபல கால்பந்து ஜாம்பவான் ராபர்ட் சார்ல்டன் காலமானார்! ரசிகர்கள் இரங்கல்!

பரபரப்பு… அதிமுக கவுன்சிலர் வெட்டிக்கொலை!

அதிர்ச்சி... புழல் சிறையில் பெண் கைதி தூக்கிட்டு தற்கொலை!

அரையிறுதியில் இந்தியா அதிர்ச்சி தோல்வி... வாக்குவாதத்தால் பரபரப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in