பெண் தொகுப்பாளரை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை... காளிகாம்பாள் கோயில் அர்ச்சகர் கைது!

காளிகாம்பாள் கோயில் அர்ச்சகர் கைது
காளிகாம்பாள் கோயில் அர்ச்சகர் கைது
Updated on
2 min read

பெண் தொகுப்பாளரை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிய வழக்கில் தலைமறைவாக இருந்த சென்னை காளிகாம்பாள் கோயில் அர்ச்சகரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவையைச் சேர்ந்த 30 வயது பெண் ஒருவர் சென்னை சாலிகிராமம் பகுதியில் தங்கியுள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் சென்னை பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் கோயிலுக்கு அந்த பெண் அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது அந்த கோவில் குருக்களான கார்த்திக் முனுசாமி அந்த பெண்ணுக்கு அறிமுகமாகி உள்ளார்.

இதனால் கோயிலுக்குச் செல்லும்போது கார்த்திக் முனுசாமியை சந்தித்து பேசி வந்துள்ளார். தொகுப்பாளர் கோயிலுக்குச் செல்லும் போது அம்மன் அருகில் அமர வைத்து சிறப்பு தரிசனம் செய்ய ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்.

மேலும் அந்த பெண்ணின் செல்போன் எண்ணை வாங்கி பேசியுள்ளார் கார்த்திக் முனுசாமி. ஆன்மீக சொற்பொழிவு மற்றும் கோயில் நடக்கும் நிகழ்ச்சிகளை வாட்ஸ்அப் மூலம் கார்த்திக் முனுசாயி ஷேர் செய்ததாக கூறப்படுகிறது. நாளடைவில் இந்த பழக்கம் நெருக்கமானது.

ஒருநாள் அந்த பெண்ணை வீட்டில் விடுவதாக கூறி தனது பென்ஸ் காரில் அழைத்துச் சென்றுள்ளார். வீட்டிற்கு சென்று அந்த பெண்ணுக்கு தீர்த்தம் என்று கூறி எதையோ குடிக்க கொடுத்ததாக தெரிகிறது. அதனை நம்பி குடித்த பெண் மயங்கி விட்டதால், அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கார்த்திக் முனுசாமி பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக கூறப்படுகிறது.

கோவில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி
கோவில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி

மயக்கம் தெளிந்த பிறகு அந்த பெண்ணின் காலில் விழுந்து திருமணம் செய்து கொள்வதாக நம்ப வைத்ததாக தெரிகிறது. ஆனால் கார்த்திக் முனுசாமிக்கு ஏற்கெனவே திருமணமாகி விட்டது. மனைவியை பிரிந்து வந்து திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக தெரிகிறது. இதையடுத்து கார்த்திக் முனுசாமி கோயிலில் இருந்து தாலி எடுத்து வந்து அந்த பெண்ணை வீட்டிலேயே வைத்து திருமணம் செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதன் பிறகு அந்த பெண் கர்ப்பமடைந்தார். அதனை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவர் மூலம் கார்த்திக் முனுசாமி கலைத்துள்ளார். மேலும் அவர் அந்த பெண்ணை பாலியல் தொழிலில் தள்ள முயன்றுள்ளார். இதனை அறிந்து அந்த பெண் அவரிடம் சண்டை போட்டுள்ளார். மேலும், அந்த பெண்ணை அவர் அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.

இதனை தொடர்ந்து கார்த்திக் முனுசாமியின் செல்போனை பார்த்த போது அந்த பெண் அதிர்ச்சியடைந்துள்ளார். அதில் பல பெண்களை ஆபாசமாக படங்கள் எடுத்து வைத்திருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து கேட்ட அந்த பெண்ணை, கார்த்திக் முனுசாமி தாக்கி உள்ளார்.

இதையடுத்து கடந்த 9 ஆம் தேதி அந்த பெண் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி கார்த்திக் முனுசாமி மீது ஏமாற்றுதல், பெண்ணுக்கு பாலியல் கொடுமை செய்தல், கருச்சிதைவு உண்டாக்கும் குற்றத்தில் ஈடுபடுதல், ஆபாசமாக திட்டுதல், கொலை மிரட்டல் மற்றும் தகவல் தொழில் நுட்ப சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம்

இதையறிந்து கார்த்திக் முனுசாமி தலைமறைவாகி விட்டார். இந்த விவகாரம் எதிரொலியாக, அவரை காளிகாம்பாள் கோயில் அர்ச்சகர் பொறுப்பில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டார். மேலும் தலைமை அர்ச்சகர் காளிதாஸிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். முன்ஜாமீன் கோரி கார்த்திக் முனுசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை மாநில மகளிர் ஆணையமும் விசாரணை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் தலைமறைவாக இருந்த கார்த்திக் முனுசாமியை விருகம்பாக்கம் மகளிர் போலீஸார் கைது செய்து மதுரவாயல் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பிறகு அவரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கையில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

எடியூரப்பா மீது போக்சோ புகார் அளித்த பெண் திடீர் மரணம்... கர்நாடகாவில் பரபரப்பு!

திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை... கட்டுக் கட்டாக பணம் பறிமுதல்!

டெல்லியில் இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: பயணிகள் அவசர அவசரமாக வெளியேற்றம்

தாய்லாந்தில் திருமணம்... சென்னையில் ரிசப்ஷன்... நடிகை வரலட்சுமியின் அடடே பிளான்!

மே 30-ம் தேதி கன்னியாகுமரி வருகிறார் பிரதமர் மோடி... பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in