இறந்த வாக்காளர்களின் பெயர்களை வாக்குச்சாவடி முன்பு ஒட்ட வேண்டும்... பாமக கோரிக்கை

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்
Updated on
1 min read

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் உயிரிழந்தவர்களின் பெயர்களை வாக்குச்சாவடியில் முன்பு ஒட்டி வைக்க வேண்டும் என பாமக சார்பில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதியின் இடைத்தேர்தல் வருகிற ஜூலை 10ம் தேதி நடைபெற உள்ளது. இதில் திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 29 பேர் களத்தில் உள்ளனர். அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்காக வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக பாமக சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாமக
பாமக

இவர்கள் உயிரிழந்துள்ள போதும், இவர்களது பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருப்பதால் மோசடியாக வாக்குகள் பதிவு செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக பாமக குற்றம் சாட்டியுள்ளது. இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் பெயர்களை ஒவ்வொரு வாக்கு சாவடியின் முன்பும் பட்டியலாக ஒட்டி வைக்க வேண்டும் என பாமக சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியல்
வாக்காளர் பட்டியல்

இது தொடர்பாக பாமகவைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலு, விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார். தேர்தல் நேர்மையாகவும், முறைகேடுகள் இன்றியும் நடைபெற தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் அந்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in