அடுத்தடுத்து இன்று 7 கூட்டங்கள் ... பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு!

பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி

மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று 7 கூட்டங்களில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மக்களவைத் தேர்தல் இந்தியாவில் 7 கட்டங்களாக நடத்தப்பட்டது. நேற்று கடைசிகட்டமாக 57 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. 543 தொகுதிகளை கொண்ட இந்திய நாடாளுமன்றத்துக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்படுகின்றன.

பாஜக, காங்கிரஸ்
பாஜக, காங்கிரஸ்

இந்தியாவில் 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக மோடி தலைமையில் ஆட்சி அமையும் என்று தேசிய ஜனநாயக கட்சிகளும், பாஜகவின் அக்கனவு பலிக்காது என்று இந்தியா கூட்டணியைச் சேர்ந்த 28 கட்சிகளும் கூறி வருகின்றன. தேர்தல் முடிந்தவுடன் வெளியான கருத்துக்கணிப்புகளில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று தெரிய வந்துள்ளது. ஆனால், ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்ட பின்பு தான், உண்மை உலகிற்குத தெரிய வரும் என்று இந்தியா கூட்டணி தலைவர்கள் கூறியுள்ளனர்.

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று ஒரேநாளில் 7 ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி

ரெமல் புயல் பாதிப்பு, வட மாநிலங்களை வாட்டி வதைக்கும் வெப்ப அலை, தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள், மக்களவைத் தேர்தலில் பாஜக ஆட்சி அமையும் பட்சத்தில் அடுத்த நூறு நாட்களில் செய்ய வேண்டிய செயல் திட்டம் உள்ளிட்ட 7 முக்கிய விவகாரங்கள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று ஆலோசனை கூட்டங்கள் டெல்லியில் நடைபெற உள்ளன. அத்துடன் உலக சுற்றுச்சூழல் தினத்தைக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in