சென்னை – நெல்லை உட்பட 9 வந்தே பாரத் ரயில் சேவை இன்று தொடக்கம்!

சென்னை – நெல்லை உட்பட 9 வந்தே பாரத் ரயில் சேவை இன்று தொடக்கம்!

சென்னை – நெல்லை உட்பட இன்று 9 வந்தே பாரத் ரயில்களின் சேவையை பிரமதர் மோடி தொடங்கி வைக்கிறார்.

பயண நேரத்தை குறைக்கும் நோக்கத்தில் மத்திய அரசால் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. அந்த வகையில், இன்று ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, பீகார், மேற்கு வங்கம், கேரளா, ஒடிசா, ஜார்கண்ட், குஜராத் ஆகிய 11 மாநிலங்களில் இணைப்பை மேம்படுத்த புதிய சேவை இன்று தொடங்கப்படுகிறது.

ஜாம்நகர் - அகமதாபாத்,  உதய்பூர் – ஜெய்ப்பூர், சென்னை – நெல்லை, ஹைதராபாத் – பெங்களூரு, விஜயவாடா – சென்னை, பாட்னா – ஹவுரா, காசர்கோடு – திருவனந்தபுரம், ரூர்கேலா – புரி, ராஞ்சி - ஹவுரா ஆகிய 9 ரயில் சேவைகள் இன்று தொடங்கப்படுகிறது. மதியம் 12.30 மணிக்கு பிரதமர் மோடி காணொலி மூலம் கொடி அசைத்து ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார்.

இந்த வந்தே பாரத் ரயில்கள் பயண நேரத்தை வெகுவாக குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரூர்கேலா- புரி மற்றும் காசர்கோடு - திருவனந்தபுரம் ரயில்கள் தற்போதைய ரயில்களை விட 3 மணிநேரம் வேகமாக இருக்கும்.

அதேபோல், ஹைதராபாத் - பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் 2.5 மணி நேரத்திற்கும் மேலாக சேமிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. நெல்லை – சென்னை வந்தே பாரத் ரயிலால் 2 மணி நேரத்திற்கும் மேல் பயண நேரம் குறையும். விஜயவாடா - சென்னை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், ரேணிகுண்டா வழித்தடத்தில் இயக்கப்பட்டு, திருப்பதி யாத்திரை மையத்திற்கு இணைப்பை வழங்க உள்ளதால் மக்கள் பெருமளவில் பயன் அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in