பாஜக தோற்பதற்கு எல்லா விஷயங்களையும் பிரதமர் மோடியே செய்துவிட்டார்... பிரகாஷ்ராஜ் கிண்டல்!

பிரகாஷ் ராஜ்
பிரகாஷ் ராஜ்

மக்கள் மோடியை வீட்டுக்கு அனுப்புற முடிவுல தான் இருக்காங்கனு நினைக்கிறேன்.பாஜக தோற்பதற்கு எல்லா விஷயங்களையும் பிரதமர் மோடி செய்துவிட்டார் என நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.

சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழாவினை சிறப்பிக்கும் வகையில், இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு ஏற்பாட்டில் அமைக்கப்பட்டுள்ள கலைஞரின் வரலாற்று புகைப்பட கண்காட்சியை நடிகர் பிரகாஷ் ராஜ் திறந்து வைத்தார்.

கண்காட்சியை திறந்துவைத்த பிரகாஷ்ராஜ்
கண்காட்சியை திறந்துவைத்த பிரகாஷ்ராஜ்

இதனை தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய பிரகாஷ் ராஜிடம், பிரதமர் நரேந்திர மோடியின் கன்னியாகுமரி பயணம் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “ நான் பல சூட்டிங்-களை பார்த்துள்ளேன், அதற்கு மக்கள் அவர்களே வருவார்கள். ஆனால் கன்னியாகுமரியில் இவர்களே ஆடியன்ஸை கூட்டிப் போகிறார்கள். அவரே கேமராமேன், இயக்குநர், ஆடியன்ஸ் என அனைவரையும் கூட்டிக்கொண்டு சென்று ஷூட்டிங் நடத்தி வருகிறார்” என தெரிவித்தார்

காந்தி திரைப்படம் வந்த பிறகு தான் மகாத்மா காந்தியை உலகம் தெரிந்து கொண்டது என பிரதமர் மோடி கூறிய கருத்துக்கு பதிலளித்த பிரகாஷ் ராஜ், “ஆமாம். எனக்கும் பிரதமர் மோடி வந்த பிறகு தான் கன்னியாகுமரியே தெரியும். விவேகானந்தர் பற்றி கூட இப்போது தான் தெரியும்” என கிண்டலாக தெரிவித்தார்.

கண்காட்சியை பார்வையிட்ட பிரகாஷ்ராஜ்
கண்காட்சியை பார்வையிட்ட பிரகாஷ்ராஜ்

தொடர்ந்து பேசிய அவர், “தமிழ்நாட்டில் இருந்து தான் பாஜகவை எப்போதோ அனுப்பியாச்சே. வடக்கே உள்ள மக்கள் என்ன முடிவு பண்ணிருக்காங்கனு தெரியல. அவங்களும் மோடியை வீட்டுக்கு அனுப்புற முடிவுல தான் இருக்காங்கனு நினைக்கிறேன். அனுப்பினால் நன்றாக இருக்கும். பாஜகதான் தோற்கும், அதற்குரிய அனைத்து வேலைகளையும் மோடி பார்த்துவிட்டார்” என அவர் தெரிவித்தார்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in