3 நாள் தியானத்தை நிறைவு செய்தார் பிரதமர் மோடி... திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டு மரியாதை

45 மணி நேர தியானத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி
45 மணி நேர தியானத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி

3 நாட்கள் தியானத்தை நிறைவு செய்த பிரதமர் நரேந்திர மோடி, விவேகானந்தர் பாறையில் இருந்து திருவள்ளுவர் சிலைக்கு சென்று அங்கு மரியாதை செலுத்தினார்.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ம் தேதி துவங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. இன்று நாடு முழுவதும் உள்ள 8 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசம் என 57 தொகுதிகளில் இறுதி கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வருகிற ஜூன் 4ம் தேதி நாடு முழுவதும் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளது.

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை
கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை

இந்த நிலையில் நேற்று முன்தினம் தேர்தல் பிரச்சாரத்தை நிறைவு செய்த பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரிக்கு வருகை தந்தார். அங்குள்ள விவேகானந்தர் பாறையில் கடந்த மூன்று நாட்களாக, அவர் தொடர் தியானத்தில் ஈடுபட்டு வந்தார். இன்று மாலை 3 மணி அளவில் அவர் தனது 45 மணி நேர தியானத்தை நிறைவு செய்தார்.

கன்னியாகுமரியில் பிரதமர் மோடியின் தியானம் நிறைவு
கன்னியாகுமரியில் பிரதமர் மோடியின் தியானம் நிறைவு

இதைத் தொடர்ந்து படகு மூலமாக விவேகானந்தர் பாறையில் இருந்து திருவள்ளுவர் சிலைக்கு அவர் பயணம் மேற்கொண்டார். அங்கு திருவள்ளுவர் சிலைக்கு மலர்தூவி அவர் மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலமாக மதுரை சென்று, பின்னர் அங்கிருந்து தனி விமானம் மூலமாக டெல்லி கிளம்பி செல்ல உள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in