நடிகர் சல்மான் கானை கொல்ல சதி: கைதான 4 பேர் கும்பல் பரபரப்பு வாக்குமூலம்

பாலிவுட் நடிகர் சல்மான் கான்
பாலிவுட் நடிகர் சல்மான் கான்

பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த 4 பேர், பாலிவுட் நடிகர் சல்மான் கானை கொலை செய்ய திட்டம் தீட்டிய அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பாலிவுட் நடிகர் சல்மான் கானை, மகாராஷ்டிர மாநிலம், பன்வெல்லில் உள்ள அவரது பண்ணை வீட்டின் அருகே காரை மறித்தது, ஏகே 47 துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த 4 பேரை பன்வெல் போலீஸார் கைது செய்துள்ளனர்.

போலீஸார் தகவல்படி, துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் அஜய் காஷ்யப் (எ) தனஞ்சய் தப்சிங், நஹ்வி (எ) கவுரவ் பாட்டியா, வாசிம் சிக்னா (எ) வாஸ்பி கான், ஜாவேத் கான் (எ) ரிஸ்வான் கான் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது
கைது

இந்த நான்கு பேரும் நடிகர் சல்மான் கானின் பண்ணை வீடு மற்றும் அவரது படப்பிடிப்பு இடங்களை நோட்டமிட்டுள்ளனர். மேலும் இந்த 4 பேரின் செல்போன்களை போலீஸார் ஆய்வு செய்தபோது சல்மான் கானை ஏ.கே.47 ரக துப்பாக்கி மற்றும் இதர ஆயுதங்களால் தாக்குமாறு அறிவுறுத்தப்பட்ட தகவல்களை போலீஸார் கண்டறிந்தனர்.

கைதானவர்களில் அஜய் காஷ்யப், பாகிஸ்தானில் உள்ள டோகா என்ற ஆயுத வியாபாரியுடன் எம்16, ஏ.கே. 47 மற்றும் ஏ.கே. 92 ரக துப்பாக்கிகளை வாங்குவதற்காக தொடர்பில் இருந்ததாக விசாரணையின் போது அஜய் காஷ்யப் தெரிவித்ததாக போலீஸார் தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.

மேலும், நவி மும்பை போலீஸார் தகவல் படி ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த 60 முதல் 70 சிறுவர்கள் கும்பல் தானே, புனே, ராய்காட் மற்றும் குஜராத் ஆகிய இடங்களிலிருந்து மும்பைக்கு வந்து நடிகர் சல்மான் கானை கண்காணித்து வந்துள்ளனர்.

ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய்
ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய்

சிறார்களை பயன்படுத்தி, சல்மான் கானை தாக்கிவிட்டு, கன்னியாகுமரி வந்து அங்கிருந்து படகு மூலம் இலங்கைக்கு தப்பிச் செல்ல குற்றவாளிகள் திட்டமிட்டுள்ளதாக போலீஸார் மேலும் தெரிவித்தனர்.

கடந்த ஏப்ரல் 14ம் தேதி மும்பையின் பாந்த்ரா பகுதியில் உள்ள சல்மான் கானின் வீட்டிற்கு வெளியே பைக்கில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இந்த சம்பவம் நடந்து ஒன்றரை மாதத்தில் தற்போது மீண்டும் சல்மான் கானை கொலை செய்ய திட்டமிட்ட கும்பல் பிடிபட்டுள்ளது பாலிவுட் திரைத்துறையினர் மட்டுமின்றி, நாடு முழுவதுமே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in