தொடர் விடுமுறை... போக்குவரத்து நெரிசலில் சிக்கித்தவித்த பெருங்களத்தூர்! பல மணி நேரம் காத்திருப்பு!

தொடர் விடுமுறை... போக்குவரத்து நெரிசலில் சிக்கித்தவித்த பெருங்களத்தூர்! பல மணி நேரம் காத்திருப்பு!

தொடர் விடுமுறை காரணமாக பொதுமக்கள் சொந்த ஊர் சென்றதால் பெருங்களத்தூர் பகுதி போக்குவரத்து நெரிசலால் சிக்கித் தவித்தது.

நாளை வெள்ளிக்கிழமை ஒரு நாள் விடுமுறை எடுத்தால் ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் சென்னையில் இருந்து ஏராளமானோர் சொந்த ஊர் நோக்கி புறப்பட்டனர். சென்னையில் இருந்து ஏராளமான மக்கள் கார், வேன், பேருந்து என நேற்று இரவு தங்கள் பயணத்தை தொடங்கினர்.

இதனால் சென்னையின் புறநகர் பகுதியான பெருங்களத்தூரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதிக அளவில் வாகனங்கள் சென்றதாலும், பலரும் பேருந்தில் ஏறுவதற்கு அங்கு குவிந்ததாலும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

போக்குவரத்து காவலர்கள் வாகனங்களை வரிசையாக செல்ல அறிவுறுத்தி தொடர் பணியில் ஈடுபட்டிருந்தனர். ஆனாலும், அளவுக்கு அதிகமான வாகனங்கள் சாலையில் வந்ததால், செல்வதற்கு இடமின்றி தேங்கி நின்றன.

வாகனங்கள் பொறுமையாக ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். மகிழ்ச்சியாக ஊருக்கு புறப்பட்ட பயணிகளின் நிலை மிகவும் மோசமானதாக இருந்தது.

அதே போல், சென்னையை நோக்கி வரும் வாகனங்களும் நெரிசலில் சிக்கின. பெருங்களத்தூரில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக வண்டலூர் வரை ஒன்றரை கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. பல மணி நேரத்திற்குப் பிறகு போக்குவரத்து சீரானது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in