நொடிப்பொழுதில் சிதறிய வாகனம்... கவுன்சில் தலைவர் உட்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே பலி!

நொடிப்பொழுதில் சிதறிய வாகனம்... கவுன்சில் தலைவர் உட்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே பலி!

பாகிஸ்தான் பலுசிஸ்தான் மாகாணத்தில் சாலையில் புதைத்து வைக்கப்பட்டு இருந்த நிலக்கண்ணி வெடியில் வாகனம் சிக்கிய விபத்தில் யூனியன் கவுன்சில் தலைவர் உள்பட 7 பேர் உயிரிழந்தனர்.

பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் மாகாணத்தின் பல்கட்டார் பகுதியின் ஒன்றிய கவுன்சில் தலைவர் இஸ்தியாக் யாகூப் மற்றும் அவரது குடும்பத்தினர் நேற்றிரவு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு வீடு திரும்பி கொண்டு இருந்தனர். அவர்கள் சென்ற வாகனம் பஞ்ச்குர் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது சாலையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலகண்ணிவெடியில் சிக்கியது. இதில் வாகனம் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் ஒன்றிய கவுன்சில் தலைவர் இஸ்தியாக் யாகூப் உள்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிழந்தனர். 4 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இஸ்தியாக் யாகூப்பை குறிவைத்து இந்த கண்ணிவெடி தாக்குதல் ரிமோட் கண்ட்ரோல் மூலம் நடத்தப்பட்டு உள்ளதாக மாவட்ட காவல்துறை துணை ஆணையர் கூறியிருக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in