
உலகக்கோப்பை வரலாற்றில் 533 ரன்கள் கொடுத்த பவுலர் என்ற மோசமான சாதனையை பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராஃப் படைத்துள்ளார்.
நடப்பு உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி மோசமாக விளையாடி லீக் சுற்றிலேயே வெளியேறியது. நேற்று நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் தோல்வியை தழுவியது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 337 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 43.3 ஓவர்கள் முடிவில் 244 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. எனவே, 93 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இதன் மூலம் இங்கிலாந்து 2025-ம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன் டிராபி தொடருக்கும் தகுதி பெற்றது.
இப்போட்டியில் 10 ஓவர்கள் வீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ஹாரிஸ் ராஃப் 64 ரன்களை வாரி வழங்கினார். நடப்பு தொடரின் ஆரம்பம் முதலே ஹாரிஸ் ராஃப் பந்து வீச்சை நாலாபுறமும் பேட்ஸ்மேன்கள் சிதறவிட்டனர். மொத்தமாக 9 போட்டிகளில் விளையாடியுள்ள ஹாரிஸ் ராஃப் 533 ரன்களை விட்டுக் கொடுத்துள்ளார்.
இதன் மூலம் இவர், 48 ஆண்டு உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு தொடரில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த பவுலர் என்ற மோசமான சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு முன்னதாக 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின் போது இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் அடில் ரசித் 11 போட்டிகளில் விளையாடி 526 ரன்கள் கொடுத்திருந்ததே மோசமான சாதனையாக இருந்தது.
இந்த பட்டியலில் 3-வது இடத்தை இலங்கை அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் தில்ஷான் மதுஷங்க பிடித்துள்ளார். அவர் 525 ரன்களை விட்டுக்கொடுத்துள்ளார். நடப்பு உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி வேகப்பந்து வீச்சாளர்கள் எதிர்பார்த்த அளவுக்கு பந்து வீசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...
தீபாவளியன்று இப்படி விளக்கேற்றினால் ஐஸ்வர்ய கடாட்சம் கிட்டும்!
வெடித்து சிதறும் பட்டாசுகள்... 3 மாவட்டங்களில் காற்று மாசு அதிகரிப்பு!
மோடியை அலற வைத்த இளம்பெண்... பிரச்சார பொதுக்கூட்டத்தில் பரபரப்பு!
திருப்பதியில் இன்று தீபாவளி ஆஸ்தானம்... லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்!
தனுஷ் முதல் சமந்தா வரை... மூன்றாவது நபர் தலையீட்டால் பிரிந்த பிரபலங்கள்!