டெல்லி விமான நிலைய மேற்கூரை இடிந்து 3 பேர் பலி... பிரதமர் மோடி மீது எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு!

டெல்லியில் விமான நிலைய மேற்கூரை சரிந்து விபத்து
டெல்லியில் விமான நிலைய மேற்கூரை சரிந்து விபத்து

டெல்லியில் விமான நிலைய மேற்கூரை சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. பணிகள் நிறைவடையும் முன்பு பிரதமர் மோடியால் இந்த முனையம் அவசர கதியில் திறந்து வைத்தார் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலைய முனையம் - 1ல் அதிக பயணிகளுக்கு இடமளிக்கும் வகையில் சமீபத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் டெல்லியில் பெய்த பலத்த மழையின்போது விமான நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்தார். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

கடந்த மார்ச் 10-ம் தேதி அன்று, பிரதமர் மோடி நாடு முழுவதும் ரூ.9,800 கோடி மதிப்பிலான 15 விமான நிலையத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் முடிக்கப்பட்ட திட்டங்களை துவக்கி வைத்தார். இந்த திட்டங்களில், டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விரிவாக்கப்பட்ட முனையம்- 1 திறக்கப்பட்டது.

பணிகள் நிறைவடையும் முன்பே மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் அமலாவதற்கு முன்பு அவசர கதியில் திறந்து வைக்கப்பட்டதே விபத்துக்கு காரணம் என எதிர்க்கட்சித் தலைவர்கள், கடுமையாக சாடியுள்ளனர்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “எனது நினைவின் படி, மார்ச் 11, 2024 அன்று, அவரது தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக அவசரமாக திறந்துவைக்கப்பட்டது" என குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல், தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் உமர் அப்துல்லா வெளியிட்டுள்ள பதிவில், "தேர்தல் நடத்தை விதிகள் அமலாவதற்கு முன்பு, டெல்லி விமான நிலையத்தின் விரிவாக்கப்பட்ட முனையம் 1-ஐ பிரதமர் மோடி திறந்துவைத்தார். பணிகள் நிறைவடைவதற்கு முன்பே, அது இடிந்து விழத் துவங்குகிறது. என்ன ஆச்சரியம்!" என குறிப்பிட்டுள்ளார்.

விமான நிலைய மேற்கூரை இடிந்து விழுந்ததையடுத்து, முனையம் 1-ல் இருந்து அனைத்து புறப்பாடுகளும் மதியம் 2 மணி வரை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கையாக செக்-இன் கவுன்ட்டர்கள் மூடப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். அதிகாரிகளின் தகவல் படி, 16 புறப்படும் விமானங்களும், 12 வருகை விமானங்களும் நள்ளிரவுக்குப் பிறகு ரத்து செய்யப்பட்டன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in