திமுக ஆட்சியின் 3 ஆண்டு நிறைவு... அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

திமுக ஆட்சியின் 3 ஆண்டு நிறைவு... அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

திமுக ஆட்சி பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து, சென்னை மெரினாவில் உள்ள அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.

தமிழகத்தில் தொடர்ந்து 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சிக்கு பிறகு 2021-ம் ஆண்டு மீண்டும் ஆட்சியை பிடித்தது திமுக. 2021 மே மாதம் 7 -ம் தேதி தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார்.

முதல்வராக பொறுப்பேற்றதுமே மகளிருக்கு கட்டணமில்லா பேருந்துப் பயணம், ஆவின் பால் விலை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைப்பு, அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கொரோனா உயர் சிகிச்சை கிடைக்க நடவடிக்கை, கொரோனா நிவாரணமாக அனைத்துக் குடும்பங்களுக்கும் ரூ.4 ஆயிரம் ஆயிரம் வழங்கல், பொதுமக்களின் மனுக்கள் மீது நூறு நாளில் தீர்வு காண்பதற் கென்று முதலமைச்சர் குறை தீர்க்கும் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்கிற தனித்துறை உருவாக்கம் உள்ளிட்ட கோப்புகளில் கையெழுத்திட்டார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அதனைத் தொடர்ந்து ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப் பெண் திட்டம், மாணவர்களுக்கும் மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டம், ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற சிவில் சர்வீஸ் தேர்வுக்கென்று உருவாக்கப்பட்ட நான் முதல்வன் திட்டம், மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் உரிமைத்தொகை திட்டம், விவசாயக் கடன் தள்ளுபடி, நகைக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட திட்டங்கள் மக்களிடையே வரவேற்பை பெற்றன. இந்நிலையில், மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பொறுப்பேற்று, இன்றுடன் 3 ஆண்டுகள் நிறைவடைகிறது.

நான்காவது ஆண்டில் இன்று திமுக அரசு அடியெடுத்து வைக்கிறது. இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது எக்ஸ் தளத்தில், 'இது சொல்லாட்சி அல்ல; செயலாட்சி' எனும் தலைப்பில் 3 ஆண்டுகள் ஆட்சி குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும், திமுக ஆட்சி பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து, சென்னை மெரினாவில் உள்ள அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலையில் சென்று பூ தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, சேகர்பாபு, எ.வ.வேலு, டி.ஆர். பாலு எம்பி ஆகியோர் உடனிருந்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in