அரசுடன் பேச்சுவார்த்தை ஓகே... கோரிக்கைகள் ஏற்பு... ஆம்னி பேருந்துகள் இயங்கும்!

ஆம்னி பேருந்துகள்
ஆம்னி பேருந்துகள்

மாநில அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டதையடுத்து அவர்கள் அறிவித்திருந்த வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ்  பெறப்பட்டது.

ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு இயக்கப்பட்ட  தனியார் ஆம்னி பேருந்துகள் பலவற்றில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அப்படி கூடுதல் கட்டணம் வசூலித்த  ஆம்னி பேருந்துகளில் அதிரடியாக சோதனையிட்ட போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கூடுதல் கட்டணம் வசூலித்த 119 ஆம்னி பேருந்துகளை பறிமுதல் செய்துள்ளனர்.  அதோடில்லாமல் 2,092 பேருந்துகளுக்கு ரூ.37 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இப்படி அதிகாரிகள் மூலம் சிறைபிடிக்கப்பட்ட பேருந்துகளை விடுவிக்க வேண்டும் என்றும், அபராத தொகையை ரத்து செய்ய வேண்டும் என்றும்  ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த கோரிக்கை ஏற்கப்படாத காரணத்தால் இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என்று தென் மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு அறிவித்திருந்தது.

இந்த நிலையில் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினருடன் அரசு அதிகாரிகள் சார்பில் இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.  இந்த பேச்சு வார்த்தையில் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள்  முன்வைத்த மூன்று கோரிக்கைகளும் அரசு தரப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.  இதையடுத்து இன்று  அறிவித்திருந்த வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொள்வதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.


அதிரடி... 10,000 நிறுவனங்களுக்கு வருமானவரித்துறை நோட்டீஸ்!

அதிர்ச்சி... இன்று மாலை முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது; பயணிகள் அவதி!

உருவானது ஹாமூன் புயல்... 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

துர்கா பூஜை பந்தலில் பயங்கர நெரிசல்... 5 வயது சிறுவன் உட்பட மூவர் உயிரிழந்த சோகம்

ராவண வதத்தில் பங்கேற்கும் முதல் பெண்... பிரபல இந்தி நடிகைக்கு குவியும் பாராட்டு

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in