அதிர்ச்சி... ஒரு சீட் கூட பூர்த்தியாகவில்லை... வெறிச்சோடி போயிருக்கும் 37 இன்ஜினியரிங் கல்லூரிகள்!

அதிர்ச்சி... ஒரு சீட் கூட பூர்த்தியாகவில்லை... வெறிச்சோடி போயிருக்கும் 37 இன்ஜினியரிங் கல்லூரிகள்!

தமிழ்நாடு முழுவதும் 37 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு காலத்தில் பொறியியல் படிப்பு மாணவர்களின் கனவாக இருந்தது. டாக்டர், இன்ஜினியர் தான் அனைவரின் வாயில் இருந்தும் வரும் வார்த்தைகளாக இருக்கும். அந்த அளவுக்கு பொறியியல் படிப்புக்கு மவுசு இருந்தது. அதனால் ஏராளமான கல்லூரிகள் புதிது புதிதாக தோன்றின.

ஏராளமான மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர்ந்து படித்து முடித்து வெளியே வந்தனர். ஆனால் அத்தனை பேருக்கும் வேலை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. அதனால் மாணவர்கள் பொறியியல் படிப்பை தேர்வு செய்த தயங்கினர்.

இப்போது நிலைமை தலைகீழாக மாறி, இன்ஜினியரிங் படிப்பை நோக்கி செல்லக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கை மிகப்பெரும் அளவில் குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள 442 இன்ஜினியரிங் கல்லூரிகளில் 1 லட்சத்து 57 ஆயிரம் இடங்கள் உள்ளன.

பொறியியல் கல்லூரிகளுக்கான ஜூலை 22-ம் தேதி தொடங்கியது. தற்போது வரை இரண்டு கட்ட கலந்தாய்வு முடிவடைந்த நிலையில் 208 பொறியியல் கல்லூரிகளில் 10 சதவீத இடங்கள் நிரம்பி உள்ளன. 126 பொறியியல் கல்லூரிகளில் 50 சதவீத இடங்கள் நிரம்பி உள்ளன.

நல்ல கட்டமைப்பு கொண்ட சில கல்லூரிகளில் மட்டும் 80 சதவீத இடங்கள் பூர்த்தி அடைந்துள்ளன. 37 பொறியியல் கல்லூரிகளில் ஒரு இடம் கூட தற்போது வரை பூர்த்தி செய்யப்படவில்லை. இதேநிலைத் தொடர்ந்தால் வருங்காலத்தில் பொறியியல் கல்லூரிகளை இழுத்து மூடக்கூடிய சூழல் உருவாகும் என்பதே உண்மை.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in