260 ராட்சத பலூன்களில் மலம், குப்பைகள்... தென் கொரியாவுக்கு ‘பரிசளித்த’ வட கொரியா

தென் கொரியாவின் வயல்வெளியில் இறங்கிய வட கொரிய பலூன்களில் ஒன்று
தென் கொரியாவின் வயல்வெளியில் இறங்கிய வட கொரிய பலூன்களில் ஒன்று
Updated on
2 min read

ராட்சத பலூன்கள் நிறைய மனித மற்றும் விலங்கு கழிவுகள், குப்பைகளை அனுப்பி வைத்து தென் கொரியாவை வெறுப்பேற்றி உள்ளது வட கொரியா.

கொரிய தீபகற்பத்தின் பங்காளிகளான வட கொரியா - தென் கொரியா இடையிலான மோதல், சில தருணங்களில் குழாயடிச் சண்டை அளவுக்கு தரத்தில் மாற்றமெடுக்கும். அல்லது தற்போது குப்பைகள் மற்றும் கழிவுகளை ராட்சத பலூனில் ஏற்றி அனுப்பியது போன்று நாற்றமெடுக்கவும் செய்யும். சுமார் 260 ராட்சத பலூன்கள், வட கொரியாவில் இருந்து தென் கொரியாவுக்கு பறந்து தரையிறங்கியதில், இரு நாடுகள் இடையே புதிய மோதல் முளைத்துள்ளது.

பலூன்களில் பயணித்த குப்பைகள்
பலூன்களில் பயணித்த குப்பைகள்

வட கொரியா - தென் கொரியா இடையிலான பலூன் போர்கள் பிரசித்தி பெற்றவை. பரஸ்பரம் நாடுகளுக்கு இடையிலான மோதல்கள் இந்த வகையில் வெடிக்கவும் செய்யும். அந்த பலூன்களில் வழக்கமாக எதிரி தேசத்தின் அரசுக்கு எதிரான பிரச்சாரங்களை பட்டியலிட்டிருக்கும். ஆனால் இம்முறை தென் கொரியாவுக்கு வட கொரியா அனுப்பி வைத்த பலூன்களில் கழிவுகள் மற்றும் குப்பைகள் மட்டுமே இருந்தன.

ஒரே நாளில் இந்த வகையில் சுமார் 260 பலூன்கள் எல்லையை கடந்து வந்து தென் கொரியாவில் தரையிறங்கியதாக தென் கொரிய அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். அந்த பலூன்களில் பெரும்பாலும் குப்பைகள் மற்றும் பயன்படுத்திய பொருட்களே இருந்தன. சிலவற்றில் விலங்கு மற்றும் மனித கழிவுகள், பயன்படுத்திய டாய்லெட் பேப்பர் போன்றவை இருந்ததாகவும் தென் கொரியா சீறியுள்ளது.

வட கொரியா அனுப்பிய வரிசையான பலூன்களால் உஷ்ணமான தென் கொரியாவின் ராணுவம் ’இந்த நடவடிக்கைகள் சர்வதேச சட்டத்தை மீறுவதாகவும், பொது பாதுகாப்பை கடுமையாக அச்சுறுத்துவதாகவும்’ குற்றம்சாட்டி உள்ளது. மேலும் வட கொரியாவின் கழிவுகள், குப்பைகள் அடங்கிய பலூன்கள் குறித்து, அவை தரையிறங்கும் வாய்ப்புள்ள பகுதிகளில் வசிக்கும் குடிமக்களுக்கு குறுஞ்செய்தி வாயிலாகவும் எச்சரித்தது. குறிப்பிட்ட நேரங்களில் வீட்டுக்கு வெளியே வருவதை தவிர்க்குமாறும் தென் கொரிய அதிகாரிகள் அறிவுறுத்தி இருந்தனர்.

பலூனில் பயணித்த குப்பைகள்
பலூனில் பயணித்த குப்பைகள்

வட கொரியாவிலிருந்து தப்பித்து வந்து தென் கொரியாவில் தஞ்சமடைந்திருக்கும் மனித உரிமை ஆர்வலர்கள் சிலர், சில தினங்களுக்கு முன்னதாக, வட கொரிய மக்கள் விழிப்புணர்வுக்காகவும், வட கொரிய அரசை விமர்சித்தும் வழக்கம்போல சில பலூன்களை எல்லை தாண்டி பறக்க விட்டிருந்தனர். அதிலிருந்த கருத்துக்கள் வட கொரிய அரசின் தலைவர்களை சீண்டியதால் தரம் தாழ்ந்த பதிலடித் தாக்குதலில் வட கொரியா இறங்கியதாகவும் தெரிய வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...

நாளை குமரியில் மோடியின் தியான நிகழ்ச்சி நடக்குமா?!காங்கிரஸ் கட்சியால் பெரும் பரபரப்பு!

பெண்களே உஷார்... மளிகை கடையில் பொருள் வாங்குவது போல் வந்து நகையை பறித்துச் சென்ற இளைஞர்

பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரி வருகை... கடலோர காவல்படை கப்பல்கள் தீவிர ரோந்துப்பணி

பகீர்... அரசு பள்ளிக்குள் மாணவிக்கு நடந்த அக்கிரமம்: கர்ப்பமாக்கிய தலைமை ஆசிரியர் கைது!

பிரஜ்வல் ரேவண்ணா வீட்டில் எஸ்ஐடி விடிய விடிய சோதனை... கட்டில், தலையணைகள் பறிமுதல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in