சிவகங்கை : 80 கிடாய்களைப் பலியிட்டு ஆடிப்படையல்! 20,000க்கும் மேற்பட்டவர்களுக்கு விடிய விடிய அசைவ விருந்து!

சிவகங்கை : 80 கிடாய்களைப் பலியிட்டு ஆடிப்படையல்! 
20,000க்கும் மேற்பட்டவர்களுக்கு விடிய விடிய அசைவ விருந்து!

சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டையில் பிரசித்தி பெற்ற சாக்கை உய்யவந்தம்மன் கோயில் திருவிழாவையொட்டி 20,000க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு மருத்துவ குணம் கொண்ட அசைவ ரச விருந்து வழங்கப்பட்டது.

காரைக்குடி அருகே சாக்கோட்டையில் பிரசித்தி பெற்ற சாக்கை உய்யவந்தம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆடிபடையலையொட்டி அருகில் உள்ள சாக்கை நாட்டார்கள் அதிகாலையில் 80 கிடாய்கள் பலியிட்டு தங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றினர். இதன் பின்னர் பலியிடப்பட்ட கிடாய்கள் மூலம் பாரம்பரிய முறைப்படி பூண்டு, சின்ன வெங்காயத்தை உரலில் இடித்து கைபக்குவத்துடன் இஞ்சி, தக்காளி சேர்த்து மருத்துவ குணம் கொண்ட கமகமக்கும் அசைவ ரசத்தை பெரிய பெரிய அண்டாக்களில் தயார் செய்தனர்.

மேலும் 2600 கிலோ அரிசியை சாதமாக வடித்து உய்ய வந்த அம்மனுக்கு அசைவ படையிலிட்டு வேண்டுதல் நிறைவேற்றியதை தொடர்ந்து சாக்கோட்டை, புதுவயல், கண்டனூர், பெரியகோட்டை, சாக்கவயல் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பாக்கு மட்டை தட்டு மூலம் மருத்துவ குணம் கொண்ட அசைவ ரச விருந்து வழங்கப்பட்டது. மாலையில் தொடங்கிய அசைவ விருந்து நள்ளிரவைத் தாண்டியும் நடைப்பெற்றது. இதில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் நீண்ட வரிசையில் நின்று உணவு அருந்தி சென்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in