நீலகிரியில் வெளுத்து வாங்கும் கனமழை - வீடுகளை மழைநீர் சூழ்ந்ததால் சிக்கித்தவிக்கும் மக்கள்

நீலகிரியில் தொடர் மழை... மழை வெள்ளம் சூழ்ந்த வீடுகளில் இருந்து மக்கள் மீட்பு
நீலகிரியில் தொடர் மழை... மழை வெள்ளம் சூழ்ந்த வீடுகளில் இருந்து மக்கள் மீட்பு

நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் மக்களை, தீயணைப்புத் துறையினர் கயிறுகள் கட்டி மீட்டு வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாக்களில் கடந்த ஒரு வார காலத்திற்கு மேலாக இடைவிடாமல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பெரும்பாலான ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதோடு, காட்டாற்று வெள்ளமும் பாய்ந்து வருகிறது. தொடர் மழை காரணமாக கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாக்களில் இன்றும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரியில் தொடர் மழை... மழை வெள்ளம் சூழ்ந்த வீடுகளில் இருந்து மக்கள் மீட்பு
நீலகிரியில் தொடர் மழை... மழை வெள்ளம் சூழ்ந்த வீடுகளில் இருந்து மக்கள் மீட்பு

இந்த நிலையில் கூடலூர் அடுத்த இருவயல் பகுதியில் மாயாற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அந்த பகுதியில் அமைந்துள்ள 14க்கு மேற்பட்ட வீடுகளை மழை நீர் சூழ்ந்ததை அடுத்து அங்கு சிக்கிக்கொண்ட குடும்பத்தினரை தீயணைப்புத் துறையினர் கயிறுகள் கட்டி பத்திரமாக மீட்டுள்ளனர். இதேபோல் பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளிலும் இடைவிடாமல் கன மழை பெய்து வருகிறது. அப்பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் இருக்கும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர்.

நிலச்சரிவுகள் அதிகரிப்பால் மக்கள் அச்சம்
நிலச்சரிவுகள் அதிகரிப்பால் மக்கள் அச்சம்

இதையடுத்து உதவி கேட்டு அழைப்பு விடுக்கும் குடும்பத்தினரை, தீயணைப்புத் துறையினர் கயிறுகள் கட்டி மீட்டு வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் சார்பில் அருகாமையில் உள்ள அரசுப் பள்ளிகளில் தற்காலிக நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு அங்கு பொது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டு வருகிறது. இதனால் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகளில் மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in