
ஒரே ஆப்பில் இரண்டு கணக்குகள் பயன்படுத்தும் வசதியை வாட்ஸ்அப் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது.
உலகில் மிக அதிகமான மக்களால் வாட்ஸ் அப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மொத்தமாக 2.24 பில்லியன் மக்கள் வாட்ஸ் அப்பை மாதந்தோறும் பயன்படுத்துகின்றனர். இது உலகளாவிய மிகப்பெரிய மொபைல் மெசஞ்சர் பயன்பாடுகளில் ஒன்றாகும்.
வாட்ஸ் அப் நிறுவனம் புதிது புதிதாக பயனாளர்களுக்கு அப்டேட்டை மேம்படுத்தி தந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் தற்போது மேலும் புதிய ஒரு திட்டத்தை வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
ஒரே சாதனத்தில் பல கணக்குகளைப் பயன்படுத்தும் திறனை அந்நிறுவனம் சோதித்து வருகிறது, அதன் மூலம் ஒரே ஆப் மூலமாக இரண்டு கணக்குகளை நிர்வகிக்க முடியும். அதனால் இது செய்தியிடல் பயன்பாட்டைப் பயன்படுத்த இரண்டு அலைபேசிகளை பயன்படுத்துவதைத் தடுக்கிறது என்று வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
வரும் மாதங்களில் இந்த அம்சம் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வெளிவரும் என்பதை மெட்டா அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. வாட்ஸ்அப் பயனர்களுக்கு இது போன்ற அம்சங்கள் இரட்டை சிம் போன்களைப் பயன்படுத்துபவர்களுக்கு எளிதாகும்.
வாட்ஸ் அப்-க்கு இரட்டை தொலைபேசி எண்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்தும் விளக்கப்பட்டுள்ளது. வாட்ஸ் அப்பில் உள்ள மூன்று-புள்ளி மெனுவைக் கிளிக் செய்து, செட்டிங்க்ஸ் பகுதிக்கு சென்று உங்கள் சுயவிவரப் பெயருக்கு அடுத்துள்ள கீழ்தோன்றும் அம்புக்குறியைக் கிளிக் செய்யவும். அதில் வாட்ஸ்அப் கணக்கில் மற்றொரு மொபைல் எண்ணைச் சேர்த்தால் போதுமானது.
இது வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு மிகவும் உபயோகமான ஒன்றாக இருக்கும் என்று மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
பங்காரு அடிகளார் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!
அதிர்ச்சி... காரில் கட்டுக்கட்டாக லஞ்சப் பணம்; சோதனையில் சிக்கிய பெண் மோட்டார் வாகன ஆய்வாளர்
10 லட்ச ரூபாய் செலவில் தன்னை தானே திருமணம் செய்து கொண்ட பெண்!
ரசிகர்களுக்கு விருந்து... உலகக்கோப்பை போட்டியில் இன்று பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா பலப்பரீட்சை!
அதிர்ச்சி... கணவருடன் சண்டை... 19 வயது பெண்ணை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய கும்பல்!