பவதாரணி குரலை இப்படி பயன்படுத்துவோம் என கற்பனை கூட செய்ததில்லை - யுவன் சங்கர் ராஜா உருக்கம்

யுவன் ஷங்கர் ராஜா, பவதாரிணி
யுவன் ஷங்கர் ராஜா, பவதாரிணி

பவதாரணி குரலை இப்படி பயன்படுத்துவோம் என கற்பனை கூட செய்ததில்லை, இது ஒரு விவரிக்க முடியாத தருணம் என இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது எக்ஸ் தள பக்கத்தில், 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் GOAT படத்தின் இரண்டாவது சிங்கிள் எனக்கு மிகவும் ஸ்பெஷல். இந்த உணர்வை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. பெங்களூருவில் இந்தப் பாடலை நான் இசையமைத்த போது, நானும், வெங்கட்பிரபுவும் இந்தப் பாடலை சகோதரி பாடினால் சரியாக இருக்கும் என நினைத்தோம்.

அவர் மருத்துவமனையிலிருந்து குணமடைந்து வந்ததும் அவருடைய குரலில் பாடலை பதிவு செய்யலாம் என நினைத்திருந்தேன். ஆனால், ஒரு மணிநேரம் கழித்து அவர் மறைந்த செய்தி கிடைத்தது. அவருடைய குரலை இப்படி பயன்படுத்துவேன் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. எனது இசைக்குழுவினருக்கும், இந்த சாத்தியப்படுத்தியதில் பங்காற்றிய அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இது ஒரு விவரிக்க முடியாத தருணம்' என தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் இன்று தனது ஐம்பதாவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாள் ஸ்பெஷலாக ‘GOAT' படத்தில் இருந்து இரண்டாவது சிங்கிள் இன்று யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளியாகியுள்ளது. கபிலன் வைரமுத்து எழுதியிருக்கும் இந்தப் பாடல் மறைந்த பாடகி பவதாரிணி குரலில் ஏஐ உதவியோடு வெளியாகியுள்ளது. பவதாரிணியுடன் இணைந்து நடிகர் விஜயும் இந்தப் பாடலை பாடியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in