தோற்றது கூட பரவாயில்லை... நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்கா செய்த தவறுகள்!

தோற்றது கூட பரவாயில்லை... நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்கா செய்த தவறுகள்!

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நெதர்லாந்து, தென்னாப்பிரிக்கா அணியை 38 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

நேற்று தர்மசாலா மைதானத்தில் நடைபெற்ற போட்டி மழையின் காரணமாக 43 ஓவராக குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. நெதர்லாந்து அணியின் தொடக்க வீரர்களான விக்ரம்ஜித், மேக்ஸ் ஓடோ ஆகிய இருவரும் முறையே 2, 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

அடுத்து வந்த ஆக்கர்மன்13 ரன்னிலும், பேஸ் டி லீட் 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். சைப்ரான் இங்கல்ப்ரீச் 19, தேஜா நிடாமனுரு 20, வான் பீக் 10 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க 33.5 ஓவரில் நெதர்லாந்து 7 விக்கெட்டுகளை இழந்த 140 ரன்கள் மட்டும் எடுத்தது.

இத்தகைய மோசமான நிலையில் இருந்து அணியை கேப்டன் எட்வர்ட்ஸ், ரோலோஃப் வான் டெர் மெர்வ்ஆகிய இருவரும் மீட்டனர். எட்வர்ட்ஸ் அதிரடியாக விளையாடி 78 ரன்கள் குவித்தார். வார் டெர் மெர்வ் 19 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தார். 43 ஓவர் முடிவில் நெதர்லாந்து அணி 245 ரன்கள் எடுத்தது.

246 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களம் இறங்கியது. ஆனால் நெதர்லாந்து வீரர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தென்னாப்பிரிக்க வீரர்கள் திணறினர். பவுமா 16, டிகாக் 20, வென் டர் டெசன் 4, மார்க்ரம் 1 ரன் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

44 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தென் ஆப்பிரிக்கா தடுமாறியது. இதையடுத்து மில்லர் மற்றும் க்ளாசென் இணைந்து அணியை சற்றே சரிவில் இருந்து மீட்டனர். அணியின் ஸ்கோர் 89 ஆக உயர்ந்த போது க்ளாசென் 28 ரன்னில் அவுட் ஆனார். சிறிது நேரத்தில் மில்லரும் 43 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 42.5 ஓவர்களில் 207 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. இதன் மூலம் நெதர்லாந்து அணி, பலம் வாய்ந்த தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி, உலகக்கோப்பை தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது.

இந்த உலகக் கோப்பை போட்டியில் இதுவரையிலான ஆட்டத்தில் தோல்வியைக் காணாமல் இருந்து வந்த தென்னாப்பிரிக்கா அணி நெதர்லாந்திடம் தோல்வியடைந்திருப்பது கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தது. தோற்றது கூட பரவாயில்லை. 180 ரன்களுக்குள் சுருட்ட வேண்டிய நெதர்லாந்து அணிக்கு எக்ஸ்ட்ரா வகையில் ரன்களை வாரி வழங்கியது தான் தென்னாப்பிரிக்கா செய்த மிகப் பெரிய தவறு. அதே சமயம் நெதர்லாந்து அணியினரின் பந்து வீச்சு மிக நேர்த்தியா அமைந்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in