மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் எம்.பி-யாக பதவியேற்பு: 'நீட்... நீட்...’ என கோஷமிட்ட எதிர்க்கட்சியினர்!

எம்பி-யாக பதவியேற்ற மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்
எம்பி-யாக பதவியேற்ற மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்
Updated on
1 min read

நீட் முறைகேடுகள் புயலை கிளப்பியுள்ள நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், எம்பி-யாக பதவியேற்றபோது எதிர்க்கட்சி எம்.பி-க்கள் 'நீட்... நீட்...’ என கோஷங்களை எழுப்பினர்.

18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. வரும் 26ம் தேதி மக்களவைத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக மக்களவை இடைக்காலத் தலைவராக பாஜகவின் பர்த்ருஹரி மஹ்தாப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் மக்களவையில் முதலில் பிரதமர் மோடி எம்.பி-யாக பதவியேற்றார். அதைத் தொடர்ந்து அவரது அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் வரிசையாக ஒருவர் பின் ஒருவராக எம்பி- பதவியேற்றனர்.

இந்நிலையில் மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், எம்பி-யாக பதவியேற்க சென்றபோது அவையில் கூயிருந்த எதிர்க்கட்சி எம்பி-க்கள், 'நீட்... நீட்...’ என கோஷங்களை எழுப்பினர்.

இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் கடந்த 4ம் தேதி அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள், குளறுபடுகள் நிகழ்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் தீவிரமாகியுள்ளன. இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பொதுமக்களின் எதிர்ப்புக்கு மத்தியில், பல தேசிய அளவிலான போட்டித் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே ஆங்கில செய்தி ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த அமைச்சர் தர்மேந்திர பிரதான், "நான் பொறுப்புகளில் இருந்து ஓடவில்லை. எதிர்காலத்தில் இதுபோன்ற முறைகேடுகள் நடக்காமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட வருகிறது.

தர்மேந்திர பிரதான்
தர்மேந்திர பிரதான்

மாணவர்களின் நலன்தான் முக்கியம். மாணவர்களை நான் கேட்டுக்கொள்கிறேன்... நம்பிக்கை கொண்டிருங்கள். அரசு தவறுகளின்றி அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது," என்றார்.

இருப்பினும், நாட்டில் கல்வி அவசரநிலை இருப்பதாகவும், எனவே தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in