ஆசிய விளையாட்டு… ஈட்டி எறிதலில் தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா!

நீரஜ் சோப்ரா
நீரஜ் சோப்ரா

சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றார்.

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய வீரர்கள் பதக்க வேட்டை நடத்தி வருகின்றனர். இதுவரை இந்திய அணி 18 தங்கம், 31 வெள்ளி, 32 வெண்கலப் பதக்கங்கள் வென்று மொத்தம் 81 பதக்கங்களுடன் பட்டியலில் 4-ம் இடத்தில் உள்ளது.

வரும் 8-ம் தேதி வரை போட்டிகள் நடைபெறுவதால், மேலும் சில பதக்கங்களை இந்தியா பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஈட்டி எறிதலில் தங்க மகன் நீரஜ் சோப்ரா முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.

அவர், அதிகபட்சமாக 88.88 மீட்டர் தூரம் எறிந்து முதலிடம் பிடித்தார். மற்றொரு இந்திய வீரர் கிஷோர் குமார் ஜெனா 87.54 மீட்டர் தூரம் எறிந்து 2-ம் இடம் பிடித்து வெள்ளி வென்றார். ஈட்டி எறிதலில் இந்திய வீரர்கள் நீரஜ் சோப்ரா, கிஷோர் குமார் முறையே தங்கம், வெள்ளி வென்று அசத்தி உள்ளனர்.

ஜெனா மற்றும் நீரஜ் சோப்ரா
ஜெனா மற்றும் நீரஜ் சோப்ரா

அதே போல் ஆண்களுக்கான 4x400 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய அணி 3:01.58 நிமிடங்களில் இலக்கை அடைந்து புதிய சாதனை படைத்து தங்கப் பதக்கம் வென்றுள்ளது. மகளிர் 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வித்யா ராம்ராஜ், ஐஸ்வர்யா மிஸ்ரா, பிராச்சி, சுபா வெங்கடேசன் ஆகியோர் அடங்கிய இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்றது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in