இனி ட்ரோனை கண்டு அச்சமில்லை - அதிநவீன தொழில்நுட்பத்தை உருவாக்கிய இந்திய கடற்படை

இந்திய கப்பற்படை
இந்திய கப்பற்படை

கப்பற்படையின் பாதுகாப்பிற்காக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ட்ரோன் எதிர்ப்பு பாதுகாப்பு அமைப்பை இந்திய கப்பற்படை உருவாக்கி சாதனை படைத்துள்ளது.

இந்திய கப்பற்படையில் உள்ள ஏராளமான போர்க்கப்பல்கள் மற்றும் நீர் மூழ்கி கப்பல்களின் பாதுகாப்பிற்காக பல்வேறு நடவடிக்கைகளை கப்பற்படை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஸ்வாவ்லம்பான் என்ற திட்டத்தின் கீழ் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை கப்பற்படை ஆராய்ந்து வருகிறது. இதில் மிக முக்கியமானதாக கருதப்படுவது ட்ரோன்களை தாக்கி அளிக்கும் புதிய வகை தொழில் நுட்பமாகும்.

கடலில் போர்க்கப்பல்கள், எதிரி நாட்டு ஏவுகணைகளை எதிர்த்து போராடும் வல்லமை பெற்றிருந்தாலும், சிறிய ரகத்திலான ஆளில்லா ட்ரோன்களை பறக்கவிட்டு கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களை சேதப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே இதனை தடுக்கும் வகையில் கப்பல்களை சுற்றிலும் பாதுகாப்பு கேடயமாக இருக்கக்கூடிய ஆன்ட்டி ஸ்வார்ம் ட்ரோன் எனப்படும் புதிய தொழில்நுட்பத்தை கடந்த சில நாட்களாக இந்திய கடற்படை பரிசோதித்து வந்தது.

கப்பற்படைக்கு புதிய தொலைதொடர்பு தொழில்நுட்பம்
கப்பற்படைக்கு புதிய தொலைதொடர்பு தொழில்நுட்பம்

இந்த சோதனைகள் வெற்றியில் முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் இந்திய கப்பற்படையில் இந்த பாதுகாப்பு அம்சங்கள் இணைக்கப்படும் என இந்திய கப்பற்படையின் கமாண்டர் எம்.என்.பாஷா தெரிவித்துள்ளார். இந்த தொழில்நுட்பத்தை உருவாக்கி இருப்பதன் மூலம் உலகில் உள்ள மிகச் சில நாடுகள் மட்டுமே வைத்துள்ள பாதுகாப்பு அம்சங்கள் இந்தியாவுக்கும் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

டெல்லி ஸ்வாவ்லம்பான் கண்காட்சியில் கப்பற்படை கமாண்டர் பேச்சு
டெல்லி ஸ்வாவ்லம்பான் கண்காட்சியில் கப்பற்படை கமாண்டர் பேச்சு

மேலும் நட்பு நாடுகளுடன் கப்பற்படை தொடர்பான கூட்டு பயிற்சிகள் மேற்கொள்ளும் போது அவர்களுடன் தொலைத்தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள புதிய நெட்வொர்க் ஒன்றையும் உருவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். இதன் மூலம் பாதுகாப்பு தொடர்பான போர் பயிற்சிகளில் தொலைத் தொடர்பு எளிமையாக்கப்படும் எனவும் தெரிவித்தார். இந்த புதிய தொழில்நுட்பங்கள் டெல்லியில் நடைபெறும் பாதுகாப்புத்துறை தொடர்பான ஐடெக்ஸ் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in