ஒடிசா முதல்வராக ஒரு தமிழரை ஏற்க முடியாது... அமித் ஷா மீண்டும் தாக்குதல்!

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உடன் வி.கே.பாண்டியன்
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உடன் வி.கே.பாண்டியன்
Updated on
2 min read

ஒடிசா முதல்வராக இருக்கும் நவீன் பட்நாயக், தனது பதவியில் தமிழரான வி.கே.பாண்டியனை திணிக்க முயற்சிப்பதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்குதல் தொடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் பிறந்தவரும், ஒடிசா மாநிலத்தின் முன்னாள் அரசு உயரதிகாரியும், பட்நாயக்கின் நெருங்கிய உதவியாளருமான வி.கே.பாண்டியனை குறிவைத்து, பத்ரக் மாவட்டத்தில் உள்ள சந்த்பாலியில் நடந்த பொதுக்கூட்டத்தில் இன்று அமித் ஷா மேலும் தாக்கிப் பேசினார்.

“ஒடிசா மக்கள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்து, பல போர்களில் வீரத்துடன் போராடி இருக்கிறார்கள். ஆனால் இன்று நவீன் பட்நாயக், தமிழகத்தை சேர்ந்த ஒருவரை ஒடிசாவின் முதல்வராக திணிக்க முயற்சிக்கிறார். ஒடிசா மக்கள் நவீன் பட்நாயக்கை சகித்துக் கொண்டார்கள் ஆனால் அவரது பெயரில் இந்த தமிழர் பாண்டியனை மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்” என்றும் அமித் ஷா சாடினார்.

மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா
மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா

”ஒடிசாவில் எவர் ஆட்சி செய்ய வேண்டும். ஒடியா மக்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரா அல்லது திரைமறைவிலிருந்து ஆட்டுவிக்கும் தமிழரா” என்று அமித் ஷா கேள்வி எழுப்பினார். “இங்குள்ள தேர்தல் ஒடிசாவின் பெருமைக்கான போர். இதில் ஒரு தமிழ் பாபுவை எப்படி அனுமதிக்க முடியும்” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

ராமர் கோவில் உற்சவத்தில் கலந்து கொள்ள ஒடிசா மக்களை பாண்டியன் தடுத்து நிறுத்தியதாகவும் அமித் ஷா குற்றம் சாட்டினார். “பகவான் ஜெகநாதருக்கு அவமரியாதை செய்வதை பத்ரக் மக்கள் பொறுத்துக் கொள்வார்களா? ஜெகநாதர் கோவிலின் அனைத்து வாயில்களும் திறக்கப்பட்டு, கோவிலை மரபுப்படி நடத்த வேண்டுமா இல்லையா..'' எனவும் அடுத்த சர்ச்சை விவாகரத்தில் மக்கள் மத்தியில் அமித் ஷா கேள்வி எழுப்பினார்.

பூரி பிரச்சாரத்தில் பிரதமர் மோடி; பின்னணியில் ஜெகநாதர் கோயில்
பூரி பிரச்சாரத்தில் பிரதமர் மோடி; பின்னணியில் ஜெகநாதர் கோயில்

பூரியில் உள்ள ஜெகநாதர் கோவிலின் ரத்ன பண்டரின் சாவி காணாமல் போன விவகாரத்தை மீண்டும் எழுப்பிய அமித் ஷா, ரத்னா பண்டரின் அசல் சாவி பற்றி நவீன் பட்நாயக்கிடம் கேட்டார். “டூப்ளிகேட் சாவிகள் ஏன் தயாரிக்கப்பட்டன? விசாரணை அறிக்கையை ஏன் பகிரங்கப்படுத்தவில்லை என்று நவீன் பட்நாயக் பதிலளிக்க வேண்டும். பிஜேடி அரசாங்கம் யாரைப் பாதுகாக்க முயல்கிறது? மக்களே... பாஜக ஆட்சிக்கு வாக்களியுங்கள், ஒரு மாதத்திற்குள் அறிக்கையை வெளியிடுவோம்” என்றும் அமித் ஷா அப்போது உறுதி கூறினார்.

இதையும் வாசிக்கலாமே...

எடியூரப்பா மீது போக்சோ புகார் அளித்த பெண் திடீர் மரணம்... கர்நாடகாவில் பரபரப்பு!

திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை... கட்டுக் கட்டாக பணம் பறிமுதல்!

டெல்லியில் இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: பயணிகள் அவசர அவசரமாக வெளியேற்றம்

தாய்லாந்தில் திருமணம்... சென்னையில் ரிசப்ஷன்... நடிகை வரலட்சுமியின் அடடே பிளான்!

மே 30-ம் தேதி கன்னியாகுமரி வருகிறார் பிரதமர் மோடி... பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in