கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் - தமிழக அரசு ஷாக்!

தேசிய மனித உரிமைகள் ஆணையம்
தேசிய மனித உரிமைகள் ஆணையம்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் குறித்து தலைமைச்செயலாளர் டிஜிபி மற்றும் தமிழ்நாடு அரசு ஒரு வாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்திய 59 பேர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு

இதனிடையே கள்ளச்சாராயம் விற்பனை செய்தவர்கள் மற்றும் அதில் கலக்கப்பட்ட மெத்தனாலை விற்பனை செய்தவர்கள் என பலரையும் சிபிசிஐடி போலீஸார் அடுத்தடுத்து கைது செய்து வருகின்றனர். நேற்று வரை இந்த வழக்கு தொடர்பாக 15 பேரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்திருந்தனர். இந்நிலையில் மேலும் 6 பேரை இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதனிடையே கருணாபுரம் கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும் வகையில் தமிழக அரசால் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் தலைவராக உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் கருணாபுரம் பகுதிக்கு நேரடியாக சென்று மெத்தனால் அருந்தி உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணம் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தேசிய மனித உரிமைகள் ஆணையம்
தேசிய மனித உரிமைகள் ஆணையம்

அதில், தமிழ்நாடு தலைமைச்செயலாளர் டிஜிபி மற்றும் தமிழ்நாடு அரசு ஒரு வாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்து சிபிசிஐடி மற்றும் ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தி வரும் நிலையில், தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது தமிழக அரசு தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in