டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்... சூப்பர் ஓவரில் ஓமனை வீழ்த்தி நமீபியா த்ரில் வெற்றி

நமீபியா அணி வீரர் டேவிட் வீஸ்
நமீபியா அணி வீரர் டேவிட் வீஸ்

டி20 உலக்கோப்பை தொடரின் லீக் சுற்று ஆட்டத்தில் ஓமனுக்கு எதிரான போட்டியில் நமீபியா அணி சூப்பர் ஓவர் மூலம் த்ரில் வெற்றி பெற்றது.

உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் ’பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள நமீபியா மற்றும் ஓமன் அணிகளுக்கு இடையேயான லீக் சுற்று போட்டி கெனிங்க்ஸ்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற நமீபியா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய ஓமன் அணியில் காலித் கைல் 34 ரன்களும், மக்சூத் 22 ரன்களும் எடுத்தனர். பிறவீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்ததால் அந்த அணி 20 ஓவர் முடிவில் 109 ரன்கள் மட்டும் எடுத்தது.

நமீபியா - ஓமன் அணிகள்
நமீபியா - ஓமன் அணிகள்

நமீபியா தரப்பில் சிறப்பாக பந்து வீசிய ரூபன் டிரம்புள்மேன் 4 விக்கெட்டுகளையும், டேவிட் வீஸ் 3 விக்கெட்டுகளையும் ஜெரார்ட் எராஸ்மஸ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர். 110 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நமீபியா அணி களமிறங்கியது. அந்த அணியில் ஜான் பிரைலிங் 45 ரன்கள் அடித்து அசத்தினார். ஆனால் அடுத்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இருப்பினும் இறுதி ஓவரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் வீஸ் அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார். ஆனால் 20 ஓவர் முடிவில் அந்த அணியால் 6 விக்கெட் இழப்பிற்கு 109 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ஓமன் தரப்பில் மெஹ்ரான் கான் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

நமீபியா - ஓமன் அணிகள்
நமீபியா - ஓமன் அணிகள்

இதனால் போட்டி சூப்பர் ஓவர் நோக்கி நகர்ந்தது. இந்த தொடரில் நடைபெறும் முதல் சூப்பர் ஓவர் இதுவாகும். முதலில் களமிறங்கிய நமீபியா அணியில் டேவிட் வீஸ் மற்றும் எராஸ்மஸ் ஆகியோர் சிறப்பாக விளையாடி 21 ரன்கள் எடுத்தனர். 22 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஓமன் அணி களமிறங்கியது. ஆனால் அந்த அணியால் 1 விக்கெட் இழப்பிற்கு 10 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் நமீபியா அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in