சமஸ்கிருதம், இந்தியில் புதிய குற்றவியல் சட்டங்களின் பெயர்கள்: சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

புதிய குற்றவியல் சட்டங்களின் பெயர்கள் சமஸ்கிருதம், இந்தியில் உள்ளதாகவும், இது அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது எனவும் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஏற்கெனவே இருந்த இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சியங்கள் சட்டம் ஆகியவற்றுக்கு மாற்றாக பாரதிய நியாய சம்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா, பாரதிய சாக்ஷிய அதினியம் ஆகிய 3 புதிய குற்றவியல் சட்டங்களை நிறைவேற்றது. இந்த 3 சட்டங்களும் கடந்த 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன.

புதிய குற்றவியல் சட்டங்கள்
புதிய குற்றவியல் சட்டங்கள்

பாஜக ஆதரவாளர்கள் இச்சட்டங்களை வரவேற்றாலும், நாடு முழுவதும் பரவலாக எதிர்ப்புகளும் எழுந்துள்ளன. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் 3 புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து கண்டன போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் 3 புதிய குற்றவியல் சட்டங்களின் பெயர்களானது சமஸ்கிருதம் மற்றும் இந்தியில் பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும் இது அரசியலமைப்பு சாசனத்துக்கு விரோதமானவை என அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி, வழக்கறிஞர் ராம்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.

இது தொடர்பாக நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் 9 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்களில் 9 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் மட்டும்தான் இந்தி அலுவல் மொழியாக உள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டங்கள் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்க வேண்டும். வேறு மொழிகளில் சட்டம் இயற்ற நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் இல்லை" என தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிய குற்றவியல் சட்டங்கள்
புதிய குற்றவியல் சட்டங்கள்

இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.சுந்தரேசன், 3 குற்றவியல் சட்டங்களின் பெயர்கள் ஆங்கில எழுத்துகளில் தான் உள்ளன. இது அரசியலமைப்பு சட்ட விதிகளை மீறவில்லை. இந்த சட்டங்களுக்கு பெயர்சூட்டுவது தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றத்தின் விருப்பம். இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என குறிப்பிட்டார்.

இதைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு வரும் 23ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in