பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்... சிறப்பு தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்!

கோவையில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகை
கோவையில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகை
Updated on
2 min read

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுவதை ஒட்டி சிறப்பு தொழுகைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ரம்ஜான் மற்றும் பக்ரீத் பண்டிகைகள் உலகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக தியாகத்திருநாள் என்று அழைக்கப்படும் பக்ரீத் பண்டிகை உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி மகிழ்கின்றனர்.

பக்ரீத் சிறப்பு தொழுகை
பக்ரீத் சிறப்பு தொழுகை

இந்த நாளில் ஆடுகளை வெட்டி பலியிட்டு அதன் இறைச்சியை நண்பர்கள், உறவினர்கள் ஆகியோருக்கு அளிப்பதோடு, இயலாதவருக்கும் வழங்கி தங்களது மகிழ்ச்சியை பரிமாறிக் கொள்கின்றனர். பக்ரீத் பண்டிகையை ஒட்டி உலகம் முழுவதும் உள்ள மசூதிகளில் சிறப்பு தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி தமிழ்நாட்டில் இன்று அதிகாலை 8 மணி முதல் நடைபெறும் சிறப்பு தொழுகை நிகழ்ச்சிகளில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்று உலக நன்மைக்காக சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் பின்னர் இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி தங்களது வாழ்த்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

சென்னை மெட்ரோ ரயில்
சென்னை மெட்ரோ ரயில்

பக்ரீத் பண்டிகையை ஒட்டி சென்னையில் இன்று சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் எனவும், காலை 8 முதல் 11 மணி வரையும், மாலை 5 முதல் 8 மணி வரையும் 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று பகல் 11 முதல் மாலை 5 மணி வரை, 7 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும் எனவும், இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in