இளம்பெண் கொலையில் திடீர் திருப்பம்… காதலனே கொன்ற கொடூரம்!

இளம்பெண் கொலையில் திடீர் திருப்பம்… காதலனே கொன்ற கொடூரம்!

உதகையில் இளம் பெண் கொலையில் திடீர் திருப்பமாக காதலனே கயிற்றால் கழுத்தை நெரித்துக் கொலை செய்தது தெரிய வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எடக்காடு பாதகண்டியை சேர்ந்த ராமநாதன், கல்யாணி தம்பதியின் இரண்டாவது மகள் விசித்ரா. பட்டப்படிப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார் விசித்ரா. அவருக்கு பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து வந்த நிலையில் கடந்த வாரம் அவர் வீட்டின் பின்புறம் இருந்த குடிநீர் தொட்டியில் இருந்து சடலமாக மீட்கபட்டார்.

தகவல் அறிந்து சென்ற போலீஸார், விசித்ராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதலில் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.

அதில், விசித்ராவுடன் ஒன்றாக படித்த மஞ்சூர் சிவசக்தி நகரைச் சேர்ந்த ஜெயசீலன் என்பவர், விசித்ராவின் கழுத்தை நெரித்து கொலை செய்து, அவரது உடலை தண்ணீர் தொட்டியில் வீசி சென்றது தெரிய வந்தது.

விசித்ரா, ஜெயசீலன் ஆகிய இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில், ஜெயசீலன் நடவடிக்கைகள் பிடிக்காததால் ஒரு கட்டத்தில் விசித்ரா ஜெயசீலனுடன் பழகுவதை நிறுத்திவிட்டார். இதற்கு இடையே விசித்ராவுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து வந்தனர்.

இந்த தகவல் தெரிந்ததால் ஆத்திரமடைந்த ஜெயசீலன் நேரில் வந்து தனியாக பேச வீட்டின் அருகே விசித்ராவை அழைத்து சென்றுள்ளார். அப்போது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்து ஆத்திரம் அடைந்த ஜெசீலன் கயிற்றால் விசித்ராவின் கழுத்தை நெரித்து கொலை செய்தார்.

காவல்துறையினர் ஜெயசீலனை கைது செய்து சிறையில் அடைந்துள்ளனர். திருமணம் செய்து கொள்ள மறுத்த காதலியை காதலனே கயிற்றால் கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம் உதகையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in