அதிர்ச்சி… ஓய்வு பெற்ற தம்பதியர் மர்ம நபர்களால் கொலை!

அதிர்ச்சி… ஓய்வு பெற்ற தம்பதியர் மர்ம நபர்களால் கொலை!

Published on

விழுப்புரம் அருகே வளவனூரில் வீட்டில் தனியாக வசித்து வந்த கணவன், மனைவி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்டுத்தியுள்ளது.

ராசன், உமாதேவி ஆகிய இருவரும் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியர்களாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். இவர்களது மகன் மற்றும் மகள் வெளியூரில் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், பெற்றோரை நீண்ட நேரம் தொடர்பு கொள்ள முடியாததால் இவர்களது மகள், அருகில் வசிக்கும் பெண் ஒருவருக்கு போன் செய்து, தங்கள் வீட்டிற்கு நேரில் சென்று பெற்றோரைப் பார்த்து வருமாறு கூறியுள்ளார். அப்போது வீட்டின் உள்ளே சென்றவர், தம்பதியர் இருவரும் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், விசாரணை மேற்கொண்டனர். மேலும், கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதனிடையே, உமாதேவி அணிந்திருந்த 7 பவுன் நகைகளை கொலையாளிகள் திருடி சென்றிருப்பது தெரியவந்துள்ளது. கொலையாளிகளை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. வீட்டில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x
காமதேனு
kamadenu.hindutamil.in