இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு

துப்பாக்கிச் சூடு
துப்பாக்கிச் சூடு

பீகார் மாநிலம், சசாரத்தில் நேற்று இரவு, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் மீது மோட்டார் சைக்களில் வந்த மர்ம நபர்கள் 3 பேர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

பீகார் மாநிலம், சசாரம், தாரிகான் காவல் நிலையப் பகுதியில், மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத மூன்று நபர்கள், நேற்று இரவு பைக் ரோந்து காவலர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் கையில் குண்டு பாய்ந்து படுகாயமடைந்தார்.

போலீஸார் மீது துப்பாக்கிச் சூடு
போலீஸார் மீது துப்பாக்கிச் சூடு

இந்த சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களிடம் ஏதேனும் இது தொடர்பாக தகவல்கள் இருந்தால் காவல் துறையுடன் பகிர்ந்து கொள்ளுமாறு ரோஹ்தாஸ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முன்னதாக கடந்த 19ம் தேதி அன்று, பீகார் நிலச் சீர்திருத்தம் மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் திலீப் ஜெய்ஸ்வால், மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் பீகார் காவல்துறையின் சிறப்பு புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) அமைக்க அரசு முடிவு செய்துள்ளதாக அறிவித்தார்.

விசாரணை
விசாரணை

சட்டவிரோத துப்பாக்கிகளுடன் சுற்றித் திரிபவர்களை கண்டால் சுட்டுப் பிடிக்க எஸ்ஐடி போலீஸாருக்கு அதிகாரம் அளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in