திருமணத்தை மீறிய உறவால் பிரிவு… தாயை சரமாரியாக வெட்டிய மகன்!

திருமணத்தை மீறிய உறவால்  பிரிவு… தாயை சரமாரியாக வெட்டிய மகன்!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே திருமணத்தை மீறிய உறவால் விட்டுச் சென்ற தாயை, மகன் தேடிக் கண்டுப்பிடித்து சரமாரியாக வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவில்பட்டியை சேர்ந்த மாரிஸ்வரி (45) என்ற பெண்ணுக்கு திருமணமாகி புஷ்பராஜ் என்ற மகன் உள்ள நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு மகேஷ் என்பவரை காதலித்து வந்துள்ளார். பின்னர் அவர் கணவர் மற்றும் மகனை பிரிந்து மகேஷூடன் பல்லடம் பகுதியில் வசித்து வந்தார்.

அங்கேயே தள்ளுவண்டி கடையில் உணவு விற்பனை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் மாரிஸ்வரியின் மகன் புஸ்பராஜ், தாய் இருக்கும் இடத்தை அறிந்து அங்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது அவர்களுக்கு இடையே, வாக்குவாதம் முற்றியதை அடுத்து, புஷ்பராஜ் அரிவாளால், தாய் மாரிஸ்வரி, மகேஷ் மற்றும் மகேஷின் மாமன் கணேஷ் ஆகியோரை சரமாரியாக வெட்டியுள்ளார்.

பதிலுக்கு மகேஷ், கணேஷ் ஆகிய இருவரும் தாக்கியதில் புஸ்பராஜூக்கு காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் நான்கு பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த விவகாரம் தொடர்பாக பல்லடம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in