பகீர்... ஒரு வயது குழந்தையை மருத்துவமனையில் போட்டு விட்டு தாய் எஸ்கேப்!

குழந்தையை போட்டு விட்டு தப்பியோடும் பெண்.
குழந்தையை போட்டு விட்டு தப்பியோடும் பெண்.

ஒரு வயது குழந்தையை அரசு மருத்துவமனையில் விட்டு விட்டு தாய் தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், சிக்கபள்ளாபுரா மாவட்டத்தில் சிந்தாமணி தாலுகா மருத்துவமனை உள்ளது. அங்குள்ள குழந்தைகள் வார்டில் நேற்று ஒரு பெண் தனது ஒரு வயது குழந்தையை போட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளார். குழந்தை அழுவதைக் கண்ட மருத்துவமனை ஊழியர்கள் தாயைத் தேடி அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தனர்.

சிசிடிவி
சிசிடிவி

பின்னர், அங்குள்ள சிசிடிவி கேமராவை சோதனை செய்தனர். அப்போது ஒரு பெண் குழந்தையை சுற்றும் முற்றும் பார்த்து விட்டு தொட்டில் போட்டு விட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி ஓடுவது பதிவாகியிருந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக சிந்தாமணி நகர் காவல் நிலையத்தில் மருத்துவமனை ஊழியர்கள் புகார் அளித்துள்ளனர். இதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், குழந்தையின் தாயைத் தேடி வருகின்றனர். அந்தப் பெண் குழந்தையை விட்டுச் சென்றது ஏன்? அந்தக் குழந்தை அவருடையது தானா அல்லது வேறு யாருடையதா என பல்வேறு கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தற்போது குழந்தையை மருத்துவப் பிரிவில் உள்ள ஊழியர்கள் பாதுகாத்து வருகின்றனர்.

குழந்தையை மருத்துவமனையில் போட்டு விட்டு விட்டு தாய் தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in