பரபரப்பு... நடிகை அதுல்யா ரவி வீட்டில் திருட்டு!

நடிகை அதுல்யா ரவி
நடிகை அதுல்யா ரவி
Updated on
1 min read

நடிகை அதுல்யா ரவியின் கோயம்புத்தூர் வீட்டில் பணிப்பெண்ணே திருடியது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கோவையை சேர்ந்த நடிகை அதுல்யா ரவி குறும்படங்கள் மூலம் பிரபலமானவர். பின்பு, திரைப்படங்களிலும் நடிக்கத் தொடங்கினார். ’சாட்டை’, ‘கேப்மாரி’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். அவருடைய படங்கள் பெரிய அளவில் கவனம் பெறாமல் போகவே சினிமாவில் தனக்கான இடத்தைப் பிடிக்க போராடி வருகிறார்.

நடிகை அதுல்யா ரவி
நடிகை அதுல்யா ரவி

கிடைக்கும் வாய்ப்புகளிலும் சின்ன பட்ஜெட் படங்களிலும் நடித்து வருகிறார். இவருடைய பெற்றோர் கோவையில் வசித்து வருகின்றனர். இவர்களது வீட்டில் தற்போது திருட்டு சம்பவம் நடந்துள்ளது. அவரது வீட்டில் வேலை செய்யும் செல்வி என்ற பணிப்பெண்ணே இந்த திருட்டு சம்பவத்தை அரங்கேற்றியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டு பீரோவில் வைத்திருந்த பணம் கொஞ்சம் கொஞ்சமாக திருடு போய் வருவது பற்றி அதுல்யாவின் அம்மா விஜயலட்சுமிக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், அதை பெரிது படுத்தாமல் விட்டிருக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு, வீட்டில் இருந்த பாஸ்போர்ட் மற்றும் இரண்டாயிரம் ரூபாய் பணம் காணாமல் போகவே, இதற்கு மேல் பொறுத்திருப்பது சரியல்ல என்று வடவள்ளி காவல்துறையில் புகார் கொடுத்திருக்கிறார்.

நடிகை அதுல்யா ரவி
நடிகை அதுல்யா ரவி

விசாரணையைத் தொடங்கிய காவல்துறை சந்தேகத்தின் பேரில் வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண் செல்வியை விசாரித்து இருக்கின்றனர். விசாரணைக்கு பயந்து போன செல்வி தனது தோழியுடன் சேர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக வீட்டில் இருந்து பணத்தை எடுத்ததை ஒப்புக் கொண்டிருக்கிறார். அதுல்யாவுடன் இருந்த பிரச்சினை காரணமாக பாஸ்போர்ட் எடுத்திருப்பதாகவும் கூறியிருக்கிறார். இதனால், காவல்துறை அவர்களை கைது செய்திருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in