ராகுல் காந்தியின் விறுவிறு வீடியோ... 54வது பிறந்த நாளையொட்டி வெளியிட்ட மு.க.ஸ்டாலின்!

ராகுல் காந்தியுடன், மு.க.ஸ்டாலின்
ராகுல் காந்தியுடன், மு.க.ஸ்டாலின்
Updated on
1 min read

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் 54வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து வீடியோவை வெளியிட்டுள்ளார்.

கடந்த 1970-ம் ஆண்டு ஜூன் 19-ம் தேதி பிறந்த ராகுல் காந்தி இன்று தனது 54வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் கொள்ளுப் பேரனாகவும், நாட்டின் முதல் பெண் பிரதமரான இந்திரா காந்தியின் மகனுமான ராகுல் காந்தி, தன் இடைவிடாத உழைப்பால் காங்கிரஸ் கட்சியின் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.

ராகுல் காந்தியின் யாத்திரை.
ராகுல் காந்தியின் யாத்திரை.

பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக இந்தியா முழுவதும் இவர் நடைபயணம் மேற்கொண்டது மக்கள் மத்தியில் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை உருவாக்கியுள்ளது. 400 இடங்களுக்கு மேல் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்ற கருத்துக்கணிப்புகளை காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி மூலம் தவிடு பொடியாக்கிய ராகுல் காந்தி, இரண்டு மக்களவைத் தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இன்று பிறந்த நாள் கொண்டாடும் அவருக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் ராகுல் காந்தி எம்.பி.க்கு பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், “அன்புச் சகோதரர் ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நம் நாட்டு மக்களின் மீதான தங்களின் ஈடுபாடு உங்களை மிகப் பெரும் உயரங்களுக்கு இட்டுச் செல்லும். வரும் ஆண்டு தங்களுக்குத் தொடர்ந்து முன்னேற்றத்தோடும் வெற்றியோடும் திகழ வாழ்த்துகிறேன் ” என்று பதிவிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in