திருமணமான 3 மாதத்தில் மாயமான போலீஸ்காரர்... கல்லைக் கட்டிய நிலையில் கிணற்றில் சடலமாக மீட்பு!

போலீஸ்காரர் சிவராஜ்
போலீஸ்காரர் சிவராஜ்
Updated on
2 min read

மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட போலீஸ்காரர் மாயமானர். இந்நிலையல், பாழடைந்த கிணற்றில் கல்லைக் கட்டிய நிலையில் சடலமாக அவர் மீட்கப்பட்ட சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள மடிவால் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை செய்து வந்தவர் சிவராஜ். இவருக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் கணவன், மனைவிக்குள் குடும்பச் சண்டை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், திடீரென சிவராஜ் காணாமல் போனார். இதுகுறித்து அவரது மனைவி மற்றும் சிவராஜ் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து சுப்ரமணியபூர் போலீஸார், மடிவாலா போலீஸார் அவரை தேடி வந்தனர்.

சிவராஜ் கொலை செய்யப்பட்டாரா, தற்கொலை செய்து கொண்டாரா எனத் தெரியாத நிலையில் அவர் குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்த நிலையில், சுப்ரமணியபூர் முதல் மைசூர் சாலை முதல் ஞானபாரதி மெட்ரோ ரயில் நிலையம் வரையிலான 250 சிசிடிவிகளை போலீஸார் ஐந்து நாட்களாக சோதனை செய்து வந்தனர்.

சிசிடிவி கேமரா
சிசிடிவி கேமரா

இந்த நிலையில், ’ஞானபாரதி மெட்ரோ ரயில் நிலையத்திற்கு சிவராஜ் பைக்கில் வந்து பார்க்கிங்கில் வாகனத்தை நிறுத்தியது சிசிடிவியில் பதிவாகியிருந்தது. இதன் பின் பெங்களூரு பல்கலைக்கழக வளாகத்திற்குள் தண்ணீர் பாட்டிலுடன் சிவராஜ் செல்லும் காட்சியும் சிசிடிவியில் சிக்கியது.

இதன் அடிப்படையில் மடிவாலா போலீஸார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் பெங்களூரு பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று சோதனை நடத்தினர். அப்போது பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பாழடைந்த கிணற்றில் சிவராஜின் சடலம் மிதந்தது.

இதையடுத்து ஞானபாரதி போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சிவராஜ் கொலை செய்யப்படவில்லை என்றும், தற்கொலை செய்து கொண்டார் என்ற முடிவுக்கு போலீஸார் வந்தனர்.

இதுதவிர சிவராஜ் முதுகில் கல்லைக் கட்டி கிணற்றில் குதித்தது தெரிந்தது. சடலத்தை வெளியே எடுத்து பார்த்தபோது, ​​சடலத்தின் மீது கல் பொருத்தப்பட்டிருந்தது தெரியவந்தது. சிவராஜ் முதலில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.

ஆனால், அங்குள்ள சிசிடிவி கேமராவில் அவர் தனியாக சென்றது தெரியவந்ததால், இது தற்கொலை என்ற முடிவுக்கு போலீஸார் வந்துள்ளனர். குடும்ப காரணங்களால் சிவராஜ் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக சிவராஜ் மனைவியிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in