மலாவி துணை அதிபருடன் மாயமான ராணுவ விமானம்... தேடும் பணி தீவிரம்!

சவுலோஸ் கிளாஸ் சிலிமா
சவுலோஸ் கிளாஸ் சிலிமா

மலாவி துணை அதிபர் உள்பட 9 பேருடன் சென்ற ராணுவ விமானம் மாயமாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த விமானத்தைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மலாவி நாட்டின் துணை அதிபராக உள்ளவர் சவுலோஸ் கிளாஸ் சிலிமா ( 51) . இவர் உள்பட ஒன்பது பேரை ஏற்றிச் சென்ற ராணுவ விமானம் ஜூன் 10 அன்று உள்ளூர் நேரப்படி காலை 9,17 மணிக்கு தலைநகர் லிலோங்வேயில் இருந்து புறப்பட்டதாகவும், அதன் பின் சிறிது நேரத்தில் ரேடாரின் தொடர்பை இழந்ததாகவும் மலாவி அதிபர் மாளிகை செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.

சவுலோஸ் கிளாஸ் சிலிமா. அவரது மனைவி மேரி
சவுலோஸ் கிளாஸ் சிலிமா. அவரது மனைவி மேரி

இந்த விமானம் 45 நிமிடங்களுக்குப் பிறகு வடக்கே சுமார் 370 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால், விமானத்துடனான தொடர்பை ஏவியேஷன் அதிகாரிகள் இழந்தனர் என்று மலாவி அதிபர் லாசரஸ் சக்வேராவின் அலுவலக அறிக்கை தெரிவித்துள்ளது.

ரேடாரில் இருந்து விலகியதில் இருந்து விமானத்துடன் தொடர்பு கொள்வதற்கான அனைத்து முயற்சிகளும் இதுவரை தோல்வியடைந்துள்ளன என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் போன விமானத்தை தேட அதிபர் உத்தரவிட்டுள்ளார். அத்துடன் அவரது பஹாமாஸ் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் மலாவி ஆயுதப்படைகளின் தலைவரான ஜெனரல் வாலண்டினோ ஃபிரி, காணாமல் போன விமானம் குறித்து அதிபர் சக்வேராவிடம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து வடக்கு மலாவியில் ஒரு நகரத்திற்கு அருகிலுள்ள மலைக்காடுகளில் வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in