தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் தகவல்!

15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு
15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மழை நிலவரம் தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், “குமரி கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் கோவை மாவட்டத்தில் மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

லட்சத்தீவு அருகே சூறைக்காற்று வீசக்கூடும்
லட்சத்தீவு அருகே சூறைக்காற்று வீசக்கூடும்

சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும். லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் இன்று செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை வானிலை ஆய்வு மையம்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in