மார்க் ஆண்டனி இயக்குநருக்கு BMW கார் பரிசு!

மார்க் ஆண்டனி இயக்குநருக்கு BMW கார் பரிசு!

மார்க் ஆண்டனி திரைப்படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு, படத்தின் தயாரிப்பாளர் வினோத் சொகுசு கார் பரிசாக அளித்துள்ளார்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த 'மார்க் ஆண்டனி' திரைப்படம் கடந்த செப்டம்பர் 15-ம் தேதி தமிழ், தெலுங்கு, உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இதில் ரித்து வர்மா, செல்வராகவன் உள்ளிட்டோர்  நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ் படத்திற்கு  இசை அமைத்திருந்தார். திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் தற்போது ஓடிடியில் வெளியாகி உள்ளது.

திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன், பகீரா ஆகிய படங்களை இயக்கியுள்ள ஆதிக் ரவிச்சந்திரன் பெரிய அளவில் ரசிகர்களை கவனம் ஈர்க்கவில்லை. ஆனால் டைம் டிராவல் குறித்து மார்க் ஆண்டனி படத்தை இயக்கி கவனம் ஈர்த்தார்.

இதனால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் இத்திரைப்படம் கவர்ந்தது. மார்க் ஆண்டனி 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக தயாரிப்பாளர் வினோத்குமார், இயக்குநர் ஆதிக்ரவிச்சந்திரனுக்கு BMW கார் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in