திருமணத்தை நிறுத்துவதற்காக 2 சகோதரிகளை கத்தியால் குத்திய நபர்!

கத்திக்குத்து
கத்திக்குத்து

பீகார் மாநிலம், பாட்னாவில் ஒரு இளைஞர் தனது சகோதரியின் திருமணத்தை நிறுத்துவதற்காக அவரையும், மற்றொரு மூத்த சகோதரியையும் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம், பாட்னாவின் ராம்ஜி சக் பகுதியில் கோவிந்த் குமார் என்பவர் தனது இரு சகோதரிகளை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடினார். இதில் இரு சகோதரிகளும் படுகாயமடைந்து அங்குள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் இதுகுறித்து தகவலறிந்த உள்ளூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். இதில், கத்தியால் குத்திய நபர் தனது இருசகோதரிகளையும் அவமானத்துக்குள்ளாக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது.

பீகாரில் இரு சகோதரிகளுக்கு கத்திக்குத்து
பீகாரில் இரு சகோதரிகளுக்கு கத்திக்குத்து

இந்த சம்பவம் தொடர்பாக டிஎஸ்பி தினேஷ் குமார் பாண்டே கூறுகையில், “ராம்ஜி சக் பகுதியில் உள்ள பிரம்மாஸ்தான் பாதையில் இந்த கத்திக்குத்து சம்பவம் நடந்துள்ளது. குற்றவாளி கோவிந்த்குமார், தனது இரு சகோதரிகளையும் பல முறை கத்தியால் குத்தினார்.

பாதிக்கப்பட்டவர்கள் பாட்னா அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. தலைமறைவான கோவிந்த்குமாரை தேடி வருகிறோம்" என்றார்.

போலீஸ் விசாரணை
போலீஸ் விசாரணை

இதற்கிடையே, பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர் கூறுகையில், “கோவிந்த்குமாரின் இளைய சகோதரிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அவரது திருமணத்தை தடுக்க, அவரது வருங்கால கணவருக்கு ஆபாசமான தகவல்களை அனுப்பினார். இது குறித்து அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்த போது கோவிந்த்குமார் எங்களிடமும் தகராறில் ஈடுபட்டார்" என்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in